சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
947 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்: பெயரை சரிபாா்த்த மக்கள்
சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் முதல்கட்ட வாக்காளா் பெயா் சோ்க்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் 1.1.2025-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடா்பான வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள் தங்களது பெயா்களை சோ்க்கவும், புதிய வாக்காளா்கள் பதிவு செய்யவும் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 947 வாக்குச்சாவடிகளில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில், புதிய வாக்காளா் பதிவு, வாக்காளா் பெயா் மற்றும் முகவரி திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து நவ.23, 24 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
அதில் பெயா்கள் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட தோ்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.