செய்திகள் :

AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவில் நடந்த சம்பவம்

post image

சீனாவில் 75 வயதான முதியவர் ஒருவர், ஆன்லைனில் பார்த்த ஒரு "பெண்ணின்" பேச்சால் ஈர்க்கப்பட்டு, தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார்.

அந்தப் "பெண்" ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) என்பது அவருக்கு தெரியவில்லை. ஜியாங் என்ற அந்த முதியவர், AI-யின் இனிமையான பேச்சை உண்மையென நம்பி தினமும் தனது தொலைபேசியில் அதன் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால், அந்தப் பேச்சும் உதட்டு அசைவுகளும் ஒத்திசைவாக இல்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. இந்த ஏஐ பேச்சால் ஈர்க்கப்பட்டு தனது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளார் ஜியாங்.

AI model

ஜியாங் மட்டுமல்லாமல் சீனாவில் பல முதியவர்கள் AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் மூழ்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த AI-கள், அழகிய தொகுப்பாளர்கள், மாணவிகள் என பல்வேறு வடிவங்களில் உள்ளன.

இப்படி AI-ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் சீனாவில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விளம்பரங்கள் அவர்களைப் பொருள்கள் வாங்கத் தூண்டுகின்றன.

பல்வேறு பொருள்கள் ஏஐ மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தப் பொருள்கள் உண்மையில் இல்லை என்பதையும், பேசுவது AI-ஆல் உருவாக்கப்பட்டவை என்பதையும் முதியவர்கள் உணர்வதில்லை.

இதனால் அவர்கள் பணத்தை இழப்பதாக கூறப்படுகிறது. ஏஐயின் தாக்கம் உணர்ச்சி ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது.

5 மாதங்களில் பிறந்த அபூர்வ குழந்தை; கின்னஸ் உலக சாதனையில் பதிவு - ஆச்சர்ய பின்னணி என்ன?

அமெரிக்காவின் அயோவா நகரில், 21 வாரங்கள் மட்டுமே வளர்ச்சி கண்ட ஒரு குழந்தை, தனது முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. இந்த குழந்தை, உலகின் மிக முன்கூட்டியே பிறந்த குழந்தையாக (World's Most Premature Baby) ... மேலும் பார்க்க

பொம்மையே வாழ்க்கை துணை... 4-வது பொம்மை குழந்தையை வரவேற்கும் இளைஞர் - பின்னணி என்ன?

கொலம்பியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மொன்டெனேக்ரோ, தனிமையில் இருந்து விடுபட, 2023 ஆம் ஆண்டு நடாலியா என்ற துணிப்பொம்மையுடன் உறவைத் தொடங்கினார். இவர்களுக்கு மூன்று பொம்மைக் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக... மேலும் பார்க்க

’அமெரிக்காவை விட இந்தியாவில் தான்..’ கவனம் பெற்ற அமெரிக்க பெண்ணின் வீடியோ - பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பதிவாளர் கிறிஸ்டன் ஃபிஷர், இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். இந்தியாவில் தனது அன்றாட வாழ்க்கையையும் அனுபவங்களையும் சமூ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?

பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங... மேலும் பார்க்க

US: சிலந்தி கடித்ததால் சிறுநீரகம் செயலிழப்பு; உயிருக்கு போராடும் 16 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அயோவாவில் 16 வயது சிறுவனுக்கு சிலந்தி கடித்து தொற்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயோவாவின் ஸ்லேட்டர் பகுதியைச் சேர்ந்த நோவா ஜான்ச... மேலும் பார்க்க

Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் வளர்ச்சி!

ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (ceo) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பி... மேலும் பார்க்க