செய்திகள் :

Aishwarya Rai: `நெகடிவ் கமெண்ட்ஸை சமாளிக்க ஐஸ்வர்யா ராய் சொன்ன அட்வைஸ்' -மனம் திறந்த அபிஷேக் பச்சன்

post image

ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சனின் திரைப்படம் காளிதர் லாபட்டா வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் கலந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், ``ஒவ்வொரு மனிதனைப் போலவே, நானும் எதிர்மறை விமர்சனங்களுக்கு அதிக கவனம் செலுத்தினேன்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

இன்னும் அனைவரையும் மகிழ்விக்க, திருப்திபடுத்த விரும்பினேன். எல்லா எதிர்மறை விமர்சனங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தினேன். அப்போதுதான் என் மனைவி ஐய்ஸ்வர்யா. `எதிர்மறை விமர்சனங்கள் ஒரு வாத்து நீந்திச் செல்லும்போது அதன் முதுகுபக்கம் இருக்கும் தண்ணீர். நீங்கள் ஏன் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துகிறீர்கள்? நேர்மறையில் கவனம் செலுத்துங்கள்.' என்பார்.

சில சமயங்களில் மற்றவரை மகிழ்விக்க முயற்சிப்பது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் அதுதான் மகிழ்ச்சி. எனவே, மகிழ்ச்சியை தொலைக்கும் இலட்சியவாதியாக இருக்காதீர்கள். அதே நேரம் என்னால் எல்லோரையும் சந்தோஷப்படுத்த முடியாது என்பதையும் அறிந்திருக்கிறேன்.

சமீபத்தில் எனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையில் விவாகரத்து நடக்கப்போவதாக வந்த செய்திகளை கேட்டபோது வலித்தது. நீங்கள் என் வாழ்க்கையை வாழவில்லை.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

இதையெல்லாம் படிப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கென ஒரு குடும்பம் இருக்கும்போது, ​​உங்களைப் பற்றிய இதுபோன்ற செய்தி உங்களைப் பாதிக்கத் தொடங்குகின்றன. எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும், வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எதிர்மறையான செய்திகள் விற்பனையாகின்றன என்பதால் அதை தவறான முறையில் எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார்.

12-ம் வகுப்பில் 26 முறை தோல்வி; ஆனாலும் பி.ஹெச்டி முடித்து முனைவரான பஞ்சாயத்து தலைவர்!

படிப்புக்கு எல்லையே கிடையாது என்று சொல்வார்கள். சிலர் முதுமை காலத்திலும் படிப்பை தொடருவார்கள். குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பி.எச்.டி முடித்து முனைவர் பட்டம் பெற்ற பிறகும் 12வது வகுப்ப... மேலும் பார்க்க

துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்; பாகிஸ்தானுக்கு பயணம் செய்து மீட்ட பிரிட்டிஷர்- எப்படி?

துபாயில் திருடப்பட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை பாகிஸ்தானுக்கு பயணம் செய்து பிரிட்டிஷைச் சேர்ந்த youtuber மீட்டுள்ளார். பிரிட்டிஷ் யூடியூபரான லார்ட் மைல்ஸ் ஒரு வருடத்திற்கு முன்பு துபாய் ஹோட்டலில் தனது ஏர்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: இறுதிச்சடங்கில் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்ட டாலர்கள்; வைரல் வீடியோவில் பின்னணி என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும் பந்தய கார் ஓட்டுபவருமான டாரெல் தாமஸ் ஜூன் 15 அன்று தனது 58 வயதில் காலமானார்.இவரின் மரணத்தில் கூட பலரும் அவரை திரும்பிப் பார்க்க வேண்டும் என்று இவரின் கடைசி விருப்பத்... மேலும் பார்க்க

``இறங்க வேண்டும், குழந்தைய பிடிங்க..'' - ரயிலில் பயணியிடம் குழந்தையை விட்டுச்சென்ற பெண்

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் பயணிகள் ரயிலில் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தினமும் புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்து 10 பேர் வரை உயிரி... மேலும் பார்க்க

china: மகனின் 20 வயது வகுப்பு தோழனை திருமணம் செய்த தாய்; கர்ப்பத்தை அறிவித்து நெகிழ்ச்சி!

சீனாவை சேர்ந்த 50 வயதான ஜின் என்பவர் ஒரு தொழில் முனைவோராக இருந்து வருகிறார். அவரின் சொந்த மகனின் வகுப்புத் தோழனை மணம் முடித்து தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். கணவர் மகன் எ... மேலும் பார்க்க

Gold: `கூமாப்பட்டி மாதிரியே இதுவும் வைரல்' சுவிட்ச் முதல் வாஷ்பேஷன் வரை தங்கம் - ஆச்சர்ய வீடு

தற்போது ஒரு பவுன் தங்கம் வாங்குவதே மிடிஸ் கிளாஸ் மக்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை எகிறி உள்ளது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் வேளையில், தங்கத்தைக் கொண்... மேலும் பார்க்க