Allu Arjun: ``ஸ்கெட்ச் போட்டு டோலிவுட்டுக்கு முதல் தேசிய விருது தூக்கினேன்!'' - அல்லு அர்ஜூன் !
`புஷ்பா 2' திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்திற்கு நிலவியிருக்கும் இந்த அளப்பரிய எதிர்பார்ப்பிற்கு காரணம் இதன் முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றிதான். இத்திரைப்படத்தின் புஷ்பராஜ் கதாபாத்திரத்திற்காக தேசிய விருதையும் வென்றார் அல்லு அர்ஜுன். இந்த விருது அல்லு அர்ஜுனுக்கு மட்டுமல்ல மொத்த டோலிவுட்டுக்கும் மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால், அல்லு அர்ஜூன்தான் தேசிய விருதை வென்றிருக்கும் முதல் தெலுங்கு நடிகர்.
இது பற்றி நெகிழ்ச்சியாக பாலைய்யாவுடனான சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். அந்த நேர்காணலின் ப்ரோமோவும் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தேசிய விருது பற்றி அல்லு அர்ஜூன், `` தேசிய விருது பெற்ற நடிகர்களின் பட்டியலைப் பார்க்கும்போது அதில் ஒரு தெலுங்கு நடிகர் பெயர்கூட இல்லை.
இந்த விஷயம் எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதனை ரவுண்டப் செய்தேன். என் மனதில் ஆழமாக பதிந்த விஷயமும் இந்த புஷ்பராஜ் கதாபாத்திரம் மூலமாக நிறைவேறியது. எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. " எனக் கூறியிருக்கிறார். அல்லு அர்ஜுன் இந்த விஷயத்தை சொல்லி முடித்ததும் பாலைய்யா பெருமையுடன் சிரித்து கைதட்டினார்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...