Prabhas: 'எழுத்தாளர்களே... ரசிகர்களே...' - பிரபாஸ்ஸின் The Script Craft வலைப்பக்கம்; என்ன ஸ்பெஷல்?
பான் இந்தியா ஸ்டாரான நடிகர் பிரபாஸ் 'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' எனும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த வலைத்தளத்தில் இளம் எழுத்தாளர்கள், இயக்குநர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், தங்களுக்கான வாய்ப்புகளை வடிவமைக்கவும் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இளம் எழுத்தாளர்கள் தங்களின் கதைகளை 250 வார்த்தைகளுக்குள் சுருக்கமாக எழுதி, அதை அந்த வலைத்தளத்தில் வெளியிட வேண்டும். அந்தக் கதைகளைப் பார்வையாளர்கள் படிக்க முடியும். அவர்கள் அந்தக் கதைகளைப் படித்து, அதற்கு மதிப்பிடு ரேட்டிங் கொடுப்பார்கள்.
அந்தக் கதை தானாக அந்த ரேட்டிங் ஏற்றார்போன்ற வரிசைப்படுத்திக்கொள்ளும். மேலும், ``உங்களுக்குப் பிடித்தமான கதாநாயகனை சூப்பர் பவருடன் கற்பனை செய்துபாருங்கள்" என்ற தலைப்பில் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் 3,500 வார்த்தைகளுக்கு ஒரு கதை எழுதிப் பதிவு செய்ய வேண்டும். இந்த கதையும் பார்வையாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் ஒருவருக்குத் திரைப்படத்தின் உதவி எழுத்தாளராகவோ அல்லது உதவி இயக்குநராகவோ பணியாற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என அந்த வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தல்லா வைஷ்ணவ், பிரமோத் உப்பளபதி ஆகியோரால் நிறுவப்பட்ட தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட், புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், எழுத்தாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குவதற்காகவும் பிரபாஸால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், அந்தப் பக்கத்தை ஆடியோ புக்ஸ் வடிவத்திலும் கேட்கும்படி வடிவமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...