பஹல்காமில் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!
Ambani: 600 ஏக்கர், 200 மா வகையில் 1.50 லட்சம் மாமரங்கள்; அம்பானியின் மாந்தோப்பு பற்றி தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி எரிபொருள், மொபைல் சேவை, சில்லறை வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் கால்தடம் பதித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அம்பானியின் பெட்ரோல் சுத்திகரிப்பு மையம் இருக்கிறது. ஒட்டுமொத்த ஜாம்நகரையும் அம்பானி தனது கோட்டையாக மாற்றி இருக்கிறார்.
அம்பானி ஜாம்நகரில் தனது மகனின் திருமணச் சடங்குகளை உலகமே வியக்கும் வகையில் நடத்திக்காட்டினார்.
அவரது மகன் ஆனந்த் அம்பானி ஜாம்நகரில் விலங்குகள் சரணாலயம் ஒன்றைக் கட்டி இருக்கிறார். இந்த சரணாலயத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைகள் உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

அதோடு அம்பானி இங்கு 600 ஏக்கரில் பிரமாண்டமான மாந்தோப்பு ஒன்றையும் வைத்துப் பராமரித்து வருகிறார். 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மாந்தோப்பு திருபாய் அம்பானி பெயரில் இருக்கிறது.
1997ம் ஆண்டு ஜாம்நகரில் ரிலையன்ஸ் பெட்ரோல் சுத்திகரிப்பு மையத்தால் மாசு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து தங்களது தொழிற்சாலையைச் சுற்றி பசுமையாக்கும் நடவடிக்கையாக இந்த மாந்தோப்பு தொடங்கப்பட்டது.
இந்த தோட்டத்தைப் பராமரிக்க ஏராளமான தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
600 ஏக்கரில் மொத்தம் 1.50 லட்சம் மாமரங்கள் இருக்கின்றன. இதில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரகங்கள் உட்பட 200 வகையான மாமர மரங்கள் இப்பண்ணையில் இருக்கின்றன. 600 ஏக்கரும் சொட்டு நீர் மூலம் பராமரிக்கப்படுகிறது.
மாமரங்களுக்குத் தேவையான தண்ணீர் கடலிலிருந்து எடுக்கப்பட்டு, அதனைச் சுத்திகரித்துப் பயன்படுத்துகின்றனர்.
இது தவிர மழைநீரைச் சேமித்தும் பயன்படுத்துகின்றனர். இங்கு விளையும் 600க்கும் அதிகமான டன் மதிப்பு மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உள்ளூர் தேவைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு அருகில் உள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாங்கன்றுகளை அம்பானி நிறுவனம் இலவசமாகக் கொடுத்து, நவீன விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் பயிற்சியும் கொடுக்கிறது.
முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி இந்த தோட்டத்தை முன்னின்று கவனித்துக்கொள்கிறார். மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானிக்கு மாம்பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவேதான் முகேஷ் அம்பானி இந்த மிகப்பெரிய மாந்தோப்பை நடத்தி வருகிறார்.

அதோடு அம்பானி இங்கு 600 ஏக்கரில் பிரமாண்டமான மாந்தோப்பு ஒன்றையும் வைத்துப் பராமரித்து வருகிறார். 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மாந்தோப்பு திருபாய் அம்பானி பெயரில் இருக்கிறது.
1997ம் ஆண்டு ஜாம்நகரில் ரிலையன்ஸ் பெட்ரோல் சுத்திகரிப்பு மையத்தால் மாசு பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து தங்களது தொழிற்சாலையைச் சுற்றி பசுமையாக்கும் நடவடிக்கையாக இந்த மாந்தோப்பு தொடங்கப்பட்டது.
இந்த தோட்டத்தைப் பராமரிக்க ஏராளமான தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs