ரூ.56,000 கோடி கடனை முன்கூட்டியே செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
Ameer: ``விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் தி.மு.க வாக்குகளை இழக்கும்" - அமீர்
சமுத்திரக்கனி நடித்திருக்கும் 'திரு.மாணிக்கம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் இயக்குநர் அமீர், "தி.மு.க மூன்றாம் தர பேச்சாளர்களை வைத்து கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வேண்டும். ஆபாசமாகப் பேசுவதாலோ, குடும்பத்தை அவதூறாகப் பேசுவதாலோ, அவர்களது தொழிலை இழிவுப்படுத்திப் பேசுவதாலோ எவரையும் வீழ்த்திவிட முடியாது. விஜய்யை தரம் தாழ்ந்து பேசுவதால் நீங்கள் உங்களின் வாக்குகளை இழக்கும் நிலைதான் ஏற்படும். அது உங்களுக்குப் பலவீனத்தைத்தான் கொடுக்கும்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்', 'டங்ஸ்டன்' போன்றவற்றில் விஜய்யின் கருத்து என்ன? மக்கள் பிரச்னைகளில் அவரது கருத்து என்ன? என்பதை வைத்துத்தான் விஜய்யின் அரசியலை வரவேற்பது குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் பிரச்னைகளில் விஜய் என்ன நிலைப்பாடு எடுக்கிறார், என்ன மாதிரி செயல்படுகிறார் என்பதைப் பொறுத்துதான் 2026ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் நிலையை தீர்மானிக்கும்" என்று பேசியிருக்கிறார்.