செய்திகள் :

Antarctica: உலகின் மிகப் பெரிய பனிப்பாறை A23a நகரத் தொடங்கியது - இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

post image
உலகின் மிகப் பெரிய மற்றும் பழைமையான பனிப்பாறைக்கு A23a என்று பெயர். நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில் இருந்த இந்த பனிப்பாறை மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறது.

முதன்முதலாக 1980களில் உலகின் மிகப் பெரிய பனிப்பாறையாக அறியப்பட்டது A23a. அதன் பிறகு A68, A71 என இதைவிடப் பெரிய பனிப் பாறைகள் தோன்றியிருந்தாலும் அவை சில காலத்திலேயே உருகி சிறியதாகிவிட்டதால் மீண்டும் அந்த பட்டத்தைப் பெற்றிருக்கிறது A23a.

A23a பாறை 2020ம் ஆண்டு வடக்கு நோக்கி நகர ஆரம்பித்தாலும் சில மாதங்களுக்கு முன் தெற்கு ஓர்க்னி தீவுகள் அருகில் ஒரே இடத்தில் சுழல ஆரம்பித்தது. இப்படி தண்ணீர் ஒரே இடத்தில் ஒரு பொருளை சுழலச் செய்யும் அரிய நிகழ்வுக்கு Taylor Column என்று பெயர். இப்போது A23a மீண்டும் நகரத் தொடங்கியிருக்கிறது.

Antarctica

பெரிய பனிப்பாறைகளின் இயக்கம் அறிவியலாளர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. ஏனென்றால் இது கடல் மட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி காலநிலையை பாதிக்கும் வாய்ப்புமிருக்கிறது.

A23a பனிப்பாறை

A23a பனிப்பாறை லண்டன் நகரைவிட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட 3,800 சதுர கி.மீ. (மதுரை மாவட்டத்தின் பரப்பளவு 3,742 சதுர கி.மீ).

1986ம் ஆண்டு அண்டார்டிக்காவிலிருந்து தனியாகப் பிரிந்தது இந்தப் பனிப்பாறை. அதன்பின்னர் கடலுக்கு அடியில் பாறையின் அடிபாகம் சிக்கிக்கொண்டது. அதனால் 30 ஆண்டுகள் நகராமல் நின்றிருந்தது. 2020ம் ஆண்டுதான் நகரத்தொடங்கியது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே கூறுவதன்படி, பனிப்பாறை வடக்கு நோக்கி நகர்கிறது. இது எந்தப் பாதையில் செல்லும், சுற்றுச்சூழலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என அறிய ஆர்வமாக இருப்பதாகக் கடல்சார் நிபுணர் ஆண்ட்ரூ மெய்ஜெர்ஸ் கூறியுள்ளார்.

Antarctica: உலகின் மிகப் பெரிய பனிப்பாறை A23a

இனி என்ன நடக்கும்?

காலநிலை மாற்றம் அண்டார்டிக்கா முழுவம் தாக்கம் செலுத்துகிறது. பொதுவாக இதுபோன்ற பெரிய பாறைகள் உடைந்து கடல் மட்டத்தை உயர்த்துவது பேரழிவு ஏற்படுத்துவதாக இருக்கும்.

ஆனால் A23a இயற்கையான 'பனி அடுக்கு வளர்ச்சி சுழற்சி' காரணிகளால் உடைந்திருப்பதாகவும், இதனால் கடல் மட்டம் உயர்ந்து மோசமான விளைவுகள் ஏற்படாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஜார்ஜியாவின் துணை அண்டார்டிக் தீவை A23a அடையும் எனக் கூறுகின்றனர். அங்கு வெப்பம் அதிகமான தண்ணீருடன் தொடர்பு கொள்வதால் A23a பல சிறிய பாறைகளாக உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பாறை கறைவது ஏன் நல்லது?

உயிரியல்-வேதியியலாளர் லாரா டெய்லர், "இந்த வகை பெரிய பனிப்பாறைகள் உடைந்து கடலில் கரையும் போது அவை கடலுக்கு பலவகை சத்துக்களை அளிக்கும். இதனால் அது செல்லும் வழியில் உயிரினங்கள் செழிக்கும். இதுகுறித்து ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்பாறை கடலின் கார்பன் அளவை எவ்வாறு பாதிக்கிறது, வளிமண்டலத்துடனான சமநிலையை எவ்வாறு பாதிக்கிறது ஆகியவற்றை ஆராய வேண்டுமெனக் கூறியிருக்கிறார் லாரா.

மேலும், எந்த மாதிரியான பனிப்பாறைகள் உயிரியல் சூழலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய பனிப்பாறை கடந்து செல்லும் இடங்களில் தண்ணீர் மாதிரியை சேகரித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எட்டிப் பார்த்த ஒற்றைக் கொம்பன்; காத்திருந்த மராபூ நாரை - காசிரங்கா தேசியப் பூங்கா | Photo Album

காசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்கா தேசியப் பூங்காகாசிரங்க... மேலும் பார்க்க

அடுத்தடுத்து தகர்க்கப்படும் குடியிருப்புகள்; நள்ளிரவில் அலறும் மக்கள் - என்ன நடக்கிறது பந்தலூரில்?

நீலகிரி காடுகளில் வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் வனவிலங்குகள் தனியார் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனிதர... மேலும் பார்க்க

நெல்லை கனமழை: தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு... நிரம்பி வழியும் மருதூர் அணைக்கட்டு! - Photo Album

நெல்லை கனமழை வெள்ளம்: நிரம்பி வழியும் தாமிரபரணி ஆறு மருதூர் அணைக்கட்டு.! மேலும் பார்க்க

தொடர் கனமழை... திறக்கப்பட்ட புழல் ஏரி.. ஸ்பாட் விசிட் | Photo Album

புழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரிபுழல் ஏரி மேலும் பார்க்க