செய்திகள் :

Apollo: வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்

post image
அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பெருமிதத்துடன் இன்று தொடங்கி வைத்திருக்கிறது.

வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சீரும் சிறப்புமாக நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத் துறையின் செயலரும், அரசின் கூடுதல் தலைமை செயலருமான திருமதி. சுப்ரியா சாஹு ஐஏஎஸ், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் (AHEL)  நிறுவனர் &  தலைவர் டாக்டர். பிரதாப் C ரெட்டி, AHEL-ன் துணை தலைவர் டாக்டர். பிரீத்தா ரெட்டி, மற்றும் AHEL-ன் நிர்வாக இயக்குநர் Ms. சுனிதா ரெட்டிஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் பேசுகையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை வழங்குவதில் தொடர்ந்து சிறப்பான கூர்நோக்கத்தை தமிழ்நாடு அரசு கொண்டிருக்கிறது. இம்மாநிலத்திற்கு புத்தம்புதிய, புதுமையான தொழில்நுட்பங்களை தொடர்ந்து கொண்டுவந்து அதனை இந்தியாவெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் விரிவுபடுத்தும் பணியை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் செய்துவருவது எங்களுக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில், புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பை புரட்சிகரமாக ஆக்குவதில் அப்போலோ கேன்சர் சென்டர்கள் மற்றும் அவர்களது குழுவினர் மேற்கொண்டுவரும் தளர்வில்லாத முயற்சிகளை நான் மனமாரப் பாராட்டுகிறேன். வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள அப்போலோ கேன்சர் சென்டரில் இப்போது தொடங்கியிருப்பது புற்றுநோய்க்கு எதிரான எமது ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்பதில் ஐயமில்லை,” என்று கூறினார்.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் (AHEL)  நிறுவனர் &  தலைவர்டாக்டர். பிரதாப் C ரெட்டி பேசுகையில், “இந்திய நாட்டின் மக்களுக்கு உலகத்தரத்திலான உடல்நல பராமரிப்பை வழங்குவதே அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்-இல் எங்களது குறிக்கோளாகவும், செயல்பாடாகவும் இருந்து வருகிறது. இக்குறிக்கோளை அடைவதற்காக சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதில் நாங்கள் வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். வானகரத்தில் எமது புதிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கியிருப்பது, சென்னை முழுவதிலும் மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களிலும் உள்ள மக்களுக்கு முதல்தர புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகுவசதியை கணிசமாக உயர்த்தும் புற்றுநோய் என்பது உயிரை  அச்சுறுத்தும் ஒரு நோயாக இருப்பதை தடுத்து சமாளித்து வெள்ளக்கூடிய ஒரு பாதிப்பாக இருக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவது என்ற எமது தொலைநோக்கு திட்டத்திற்கு இணக்கமானதாக இந்த தொடக்கம் அமைந்திருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதன் மூலம் எமது நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்கி இந்த இலக்கை அடைவதை நோக்கி நாங்கள் ஊக்கத்தோடு தொடர்ந்து பயணிப்போம்” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத் துறையின் செயலரும், அரசின் கூடுதல் தலைமை செயலருமான திருமதி. சுப்ரியா சாஹுஐஏஎஸ் கூறியதாவது: “தொடங்கப்பட்டிருக்கும் இப்புதிய சிகிச்சை மையம், மக்கள் பெற்று பயனடைவதற்கு தகுதியுள்ள சிறப்பான சிகிச்சை அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் மக்களுக்கு நெருக்கமாக தரமான சிகிச்சை பராமரிப்பை கொண்டுவந்து சேர்க்கும் என்று நான் நம்புகிறேன். புற்றுநோய் பாதிப்பிலிருந்து சிகிச்சையின் மூலம் குணமடைந்து அதிக ஆரோக்கியத்துடன் வாழும் ஒரு சமுதாயம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை இதுவொரு முக்கியமான நடவடிக்கையாகும்.”

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்-ன் துணை தலைவர்டாக்டர். பிரீத்தா ரெட்டி இந்நிகழ்வின்போது உரையாற்றுகையில், “சிகிச்சை, புத்தாக்க செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளுக்கு கனிவான ஆதரவு ஆகியவற்றில் புதிய தரஅளவுகோல்களை நிறுவுவதன் வழியாக புற்றுநோய் சிகிச்சையில் இந்நாட்டிற்கே அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. தமிழ்நாட்டில் முதன்முறையாக எலெக்டா ஹார்மனி ப்ரோ கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்ப வசதியுடன் வானகரத்தில் அப்போலோ கேன்சர் சென்டர் தொடங்கப்பட்டிருப்பது இந்த பொறுப்புறுதிக்கு ஒரு நேர்த்தியான சான்றாகும். இந்த புதிய மையமானது, மேம்பட்ட நவீன புற்றுநோயியல் சிகிச்சை சேவைகளை இப்பிராந்திய மக்களுக்கு நெருக்கமாக கொண்டுவந்திருக்கிறது. இதனால் நோயாளிகளுக்கும், அவர்களை கவனித்துக்கொள்பவர்களுக்கும் பயண நேரம் குறைந்திருப்பதோடு அவர்களின் சவுகரியம் அதிகமாக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான எமது 23வது மையத்தின் தொடக்கமானது, உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் கிடைக்குமாறு வழங்குவதில் எங்களது நிலையான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார்.

முழுமையான சிகிச்சையை வழங்கும் ஒரு தனித்து நிற்கும் பிரத்யேக மையமாக இது செயல்படும் என்பதே வானகரத்தில் அமைந்துள்ள அப்போலோ கேன்சர் சென்டரின் ஒரு முக்கிய அம்சமாகும். இம்மையமானது, மேம்பட்ட நோயறிதல் சேவைகளையும், அறுவைசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் சேவைகளையும் வழங்கும். அத்துடன், ஆலோசகர்கள், உணவுமுறை நிபுணர்கள் மற்றும் பேச்சு சிகிச்சை வல்லுநர்கள் போன்ற தொடர்புடைய சிறப்பு மருத்துவ பணியாளர்களின் ஆதரவும் நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் இங்கு வழங்கப்படும்.  மருத்துவ புற்றுநோயியல், கதிர்வீச்சு புற்றுநோயியல், அறுவைசிகிச்சை புற்றுநோயியல், நோயியல் மற்றும் செவிலியர்

சேவை உட்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் அனுபவமும், பயிற்சியும் பெற்ற சிறப்பான புற்றுநோயியல் நிபுணர்களை உள்ளடக்கிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களின் குழு இம்மையத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நோயாளியின் தேவைகளுக்கும் உரித்தான பிரத்யேக சிகிச்சை திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும் இக்குழுவினர் ஒருங்கிணைந்து கலந்தாலோசனையுடன் செயல்படுகின்றனர். இதன் மூலம் முழுமையான, கனிவான சிகிச்சையும் பராமரிப்பும் உறுதிசெய்யப்படுகின்றன. குறிப்பிட்ட உடலுறுப்புகளில் காணப்படும் புற்றுநோய்களின் தனித்துவமான பண்பியல்புகளுக்கு ஏற்ப உருவாக்கப்படுகிற சிகிச்சை உத்திகள் மீது வானகர புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அந்தந்த உடலுறுப்புகளுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை மேலாண்மை குழுக்கள் சிறப்பு கவனத்துடன் சிகிச்சையை வழங்கும்.

புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும்.

உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.

இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது. ஹெல்ப்லைன் எண்: 18002031066. எங்கள் வேலை நேரம் 24/7

Pregnancy: `கருவுக்குள் கரு' - 5 லட்சம் கருக்களில் ஒன்றுக்கு ஏற்படும் அரியவகை; என்ன சிகிச்சை?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 வயது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவின் உள்ளே மற்றொரு கரு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிக மிக அரிதான ஒன்றாகப் பார்... மேலும் பார்க்க

Health: வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா?

வெளிநாட்டுப்பழங்கள் அதிகமாக கிடைக்க ஆரம்பித்துவிட்டன. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். வெளிநாட்டுப் பழங்கள் நமக்கு நல்லதா? உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசி... மேலும் பார்க்க

குன்னூர்: மஞ்சள் காமாலை பதற்றத்தில் உலிக்கல் பேரூராட்சி மக்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. 17 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சி பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு வணிகர்கள் அதிகமுள்ள பகுதியாக இருக்கிற... மேலும் பார்க்க

Health: பனிக்காலமும் பனிக்காற்றும்... யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்? - மருத்துவர் விளக்கம்!

காலையில் வானம் சில நாள் சிறு தூறல் போடுகிறது. கூடவே குளிரும் தாங்க முடியவில்லை. இந்தப் பனிக்காலம் சளி, இருமல், காய்ச்சல் என்று அனைத்து வயதினரையும் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வயதானவர்... மேலும் பார்க்க

Amitabh: "யோகா, துளசி, நெல்லிக்காய் ஜூஸ்" - 82 வயதில் அமிதாப் பச்சன் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி?

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82 வயதிலும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அமிதாப் பச்சன் தற்போது படங்களில் நடித்து வருவதோடு, கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியைய... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Doctor Vikatan:இப்போது எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கு கிடைக்கிறது. கிழங்கு சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாமா.... அதில் நார்ச்சத்து தவிர வேறு என்ன இருக்கிறது? ஆண்மை வ... மேலும் பார்க்க