AR Rahman: `அப்பாவைப் பற்றிய பொய்யான தகவல்கள்... பார்க்கும்போது மனமுடைகிறது' - ARR அமீன்
கடந்த 19-ம் தேதி ஏ. ஆர். ரஹ்மானுடனான 30 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொள்வதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார் சாய்ரா.
அதனை தொடர்ந்து ஏ. ஆர். ரஹ்மானும், ``திருமண வாழ்வில் முப்பது ஆண்டுகளை எட்டிவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாரத முடிவு வந்துவிட்டது.'' என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவர் விவாகரத்தை அறிவித்த மறுநாளே அவருடைய கிட்டாரிஸ்ட் ஒருவரும் அவருடைய கணவருடனான விவாகரத்தை அறிவித்திருந்தார்.
இந்த இரண்டு விவாகரத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளப் பக்கங்களில் பரபப்பட்டு வந்த வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஏ. ஆர். ரஹ்மானின் மகன் அமீன்.
இது குறித்து அவர், `` என்னுடைய தந்தை ஒரு லெஜெண்ட். அவருடைய பணியைக் குறிப்பிட்டு நான் லெஜென்ட் என சொல்லவில்லை. அவருடைய பண்புகளையும் இத்தனை ஆண்டுகள் அவர் சம்பாதித்து வைத்த மரியாதையையும் வைத்துதான் நான் லெஜென்ட் எனக் கூறுகிறேன். இப்படியான பொய்யான செய்திகள் பரபப்படுவதைப் பார்க்கும்போது மனமுடைகிறது.
மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது அதிலிருக்கும் உண்மையின் முக்கியத்துவத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். என் தந்தையைப் பற்றிய இந்த பொய்யான தகவல்கள் பரப்புவதை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை நாம் போற்றிப் பாதுகாப்போம்." என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...