செய்திகள் :

AR Rahman: இளையராஜா பொன்விழா; ``அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில்'' - ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

post image

திரையுலகில் 50 ஆண்டுகளைக் கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது.

"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் கடந்த 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இசையுலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனிப் பெருமை தேடித் தந்தவர் இசைஞானி.

இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கிணைந்த மாமனிதர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியலிசை, மக்களிசை இவற்றுக்கிடையே நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை.

குறிப்பாக திரை இசையை கடந்து, முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக்கூடிய சாதனையாக இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மிக்க மகிழ்ச்சி உண்டு. உங்களைப் போலவே இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் நானும் பெருவுவகைக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா அவர்களின் பொன் விழா ஆண்டைத் தமிழ்நாடு அரசே ஒருங்கமைத்துக் கொண்டாடுவதை இளையராஜா அவர்களுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல் ஒட்டுமொத்த இசைக்கலைஞர்களுக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Thandakaranyam: ``குக்கூ படத்துக்குப் பிறகு நடிப்பை மாற்றிக்கொண்டேன்" - நடிகர் தினேஷ்

இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். இ... மேலும் பார்க்க

Thandakaranyam: ``இந்தப் படத்துல எனக்கு அக்கா, அந்தப் படத்துல எனக்கு ஜோடி" - நடிகர் கலையரசன்

இரண்டாம் உலக்கப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தண்டகாரண்யம். இ... மேலும் பார்க்க

இட்லி கடை: ``அருண் விஜய்யை நிஜமாக குத்திவிட்டேன், ரத்தம் வந்தது, ஆனால்'' - தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. தனுஷ் உடன் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்தி... மேலும் பார்க்க

Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.தனுஷ் உடன் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திப... மேலும் பார்க்க

Samantha: ``நடிகர்களின் shelf life குறைவு'' - ஓப்பனாக பேசிய சமந்தா!

திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்துவரும் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மற்றும் நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், வாழ்க்கையில் முற்றிலும் வேறுபட்ட கட்டத்தில் இருந்துவருகிறார... மேலும் பார்க்க

இளையராஜா 50: ``என்னை விட்டால் அவரது சுயசரிதைக்கு நானே திரைக்கதை எழுதிவிடுவேன்'' - ரஜினி பேச்சு

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் பயண நிறைவைக் கொண்டாடும் விதமாக நேற்று தமிழ்நாடு அரசு விழா ஒன்றை நடத்தியது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜின... மேலும் பார்க்க