செய்திகள் :

Ashwin: ``அவங்க அப்பா எல்லா மேட்ச்சும் பாக்க வருவார்" - அஷ்வின் குறித்து நெகிழும் TNCA பழனி

post image
இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அஷ்வினை சிறுவயதிலிருந்தே பார்த்து வரும் அவரது கிரிக்கெட் கரியரில் முக்கியப் பங்கும் ஆற்றிய தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் செயலாளர் R.I.பழனியிடம் அஷ்வின் குறித்துப் பேசினேன்.
Ashwin

அஷ்வினின் ஓய்வைப் பற்றி பேசிய அவர், ``அஷ்வினை சின்ன வயசுல இருந்தே பார்த்துட்டு இருக்கேன். அப்போவே அவருக்கு தன்னம்பிக்கை ரொம்ப அதிகம். அதேமாதிரி கிரிக்கெட் பற்றிய அறிவும் அதிகம். ஆரம்பத்துல பேட்ஸ்மேனாதான் ஆடிக்கிட்டு இருந்தாரு. அதுக்குப் பிறகுதான் பௌலரா ஆகுறாரு. U17 லெவல்ல பௌலரா கலக்கிட்டாரு. அதுக்குப்புறம் எதைப் பத்தியுமே யோசிக்கல. இந்தியாவுக்காக செலக்ட் ஆகி ரொம்ப சிறப்பா ஆடிட்டாரு. இதுவரைக்கும் இல்லாத வகையில நிறைய சாதனைகளை செஞ்சிட்டாரு. தமிழ்நாட்டுல இருந்து இந்தியாவுக்காக ஆடுன மிகச்சிறந்த கிரிக்கெட்டர் அவர்தான். அதுல எந்த சந்தேகமும் இல்ல. அஷ்வினோட அப்பா அம்மாவும் அவருக்கு ரொம்பவே சப்போர்ட்.

அஷ்வின் ஆடுற ஒரு மேட்ச் கூட அவங்க அப்பா நேர்ல பார்க்க மிஸ் பண்ண மாட்டாரு. இந்த சமயத்துல அவர் ரிட்டயர்ட் ஆனது அவரோட சொந்த முடிவு. அதுல நாம கருத்து சொல்ல முடியாது. லெவன்ல இடம் இல்லாம பென்ச்ல இருந்தது அவருக்கு கஷ்டமா இருந்துருக்கலாம். ஆனாலுமே, அவர் இன்னும் கொஞ்ச நாள் ஆடியிருக்கலாம்ங்றதுதான் எல்லாரோட எண்ணமும். நீங்க கூட பாருங்க சமீபத்துல சேப்பாக்கத்துல பங்களாதேஷ் கூட செஞ்சுரியும் போட்டு நிறைய விக்கெட்டும் எடுத்திருப்பாரு. நல்ல ஃபார்ம்லதான் இருந்தாரு. கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாளாச்சும் ஆடியிருக்க முடியும்.

R.I.Palani

அவரோட தனிப்பட்ட முடிவுங்றதுனால நாம எதுவுமே சொல்ல முடியாது. நாங்க கூட சமீபத்துலதான் அஷ்வினுக்காக அவர் 100 டெஸ்ட்ல ஆடுனதுக்காகவும் 500 விக்கெட் எடுத்ததுக்காகவும் பாராட்டு விழா எடுத்தோம். அதேமாதிரி இப்போவும் கூட பண்ணலாம். ஆனா, அஷ்வின் இன்னும் ஐ.பி.எல் ல ஆடிக்கிட்டுதான் இருக்குறாரு. அதனால அவர் ஒத்துக்கிட்டா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்புல அவருக்கு பிரமாண்டமா விழா எடுக்கத் தயாரா இருக்கோம்.' என்றார்.

சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அஷ்வின் 100 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய அஷ்வின் R.I.பழனி அவர்களையும் தன்னுடைய வளர்ச்சிக்கு உதவியவர் எனக் கூறி நன்றி சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஷ்வினின் ஓய்வுப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

Ashwin: `சுயமரியாதைமிக்க தமிழக வீரன்' - இந்திய அணியில் அஷ்வின் எப்படி சாதித்தார்?

2008 ஆம் ஆண்டு. ஐ.பி.எல் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதல் சீசனுக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.சென்னை அணியும் அப்போது உள்ளூர் அளவில் சிறப்பாக ... மேலும் பார்க்க

Ashwin: அஸ்வினின் டாப் கிரிக்கெட் மொமென்ட்ஸ்- ஒரு பார்வை

பார்டர் கவாஸ்கர் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போது அஸ்வின் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்கிறார். அவருடைய கரியரில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.* கிரிக்கெட் பழகிக் கொண்... மேலும் பார்க்க

Ashwin : ஓய்வு முடிவு; எமோஷ்னல் அஷ்வின், ஹக் கொடுத்த கோலி - நெகிழ்ச்சி தருணங்கள் | Video

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வை அறிவித்திருக்கிறார்.இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இர... மேலும் பார்க்க

Ashwin: `நான் தேவையில்லையெனில் ஓய்வு பெறுகிறேன்'- கறாராகச் சொன்ன அஷ்வின்; எப்போது எடுத்த முடிவு?

இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்ததற்கான காரணம் என்னவென இந்திய அணியின் கேப்டன் ர... மேலும் பார்க்க

Ashwin: `விடைபெறுகிறேன்' - ஓய்வை அறிவித்தார் அஷ்வின் காரணம் என்ன?

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்த... மேலும் பார்க்க

Prithvi Shaw: `கடவுளே இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்' - பிரித்வி ஷா விரக்தியின் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை எட்டக்கூடியவர் என்று ஒருகட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல... மேலும் பார்க்க