Asset Allocation: `செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா' - தெரிந்துகொள்ள புதுச்சேரிக்கு வாங்க..!
முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க, பணத்தை பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். முக்கிய சொத்து பிரிவுகள் என்கிற போது பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவை ஆகும்.
இந்த நான்கு முக்கிய சொத்து பிரிவுகளில் முதலீட்டாளரின் வயது, நிதி இலக்கு, முதலீட்டுக் காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.
யார் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுக்க நாணயம் விகடன் நடத்தி வருகிறது.

நாணயம் விகடன் மற்றும் இன்டகிரேட்டட் நிறுவனம் இணைந்து நடத்தும் ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலொகேஷன்!’ சிறப்பு நிகழ்ச்சி, புதுச்சேரியில் மார்ச் 16-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 am – 12.30 pm) நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நிதி நிபுணர் சோம வள்ளியப்பன் சிறப்புரையாற்றுகிறார்.
இன்டகிரேட்டட் நிறுவனத்தைச் சேர்ந்த என்.சுதாகர், எஸ்.குருராஜன் ஆகியோர் பேசுகிறார்கள். அனுமதி இலவசம்.
பதிவு செய்ய: https://bit.ly/integratedmf