செய்திகள் :

Asthram: 'நான் ஜட்ஜ் ஆக இருந்தபோது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட், ஆனா..' - நடிகர் ஷாம் பேசியதென்ன?

post image

நடிகர் ஷாம் தற்போது 'அஸ்திரம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஷாம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "புதிய தயாரிப்பாளர், புதிய இயக்குநர் என எல்லோரும் சேர்ந்துக் கடினமாக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். வெற்றியோ, தோல்வியோ வாழ்க்கையில் எல்லாம் மிகவும் சகஜமான ஒன்று. அதை பாஸிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். மக்களின் கையில்தான் இந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. நானும் ஒரு சாதரண மனிதர்தான். எனக்கும் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருக்கும்.

அஸ்திரம்

ஆனால் நான் பாஸிட்டிவாக இருப்பேன். சினிமாவிற்கு வந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது. நிச்சயமாக இந்தப் படத்திற்காக என்னை சப்போர்ட் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்" என்றிருக்கிறார்.

மேலும், நீங்கள் நடித்த படம் ஒன்றில் ஆர்யா செகன்ட் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால் படத்தின் போஸ்ட்டரை ஆர்யாவை வைத்து வெளியிட்டார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாம், " ஆர்யா என் தம்பி. நீங்கள் என்னிடம் எப்படி கேள்வி கேட்டாலும் நான் பாஸிட்டிவாகத்தான் பதில் சொல்வேன்.

அதேபோல நான் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்தபோது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட் ஆக இருந்தார். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. எல்லோருக்கும் கடவுள் அமைத்துக்கொடுக்கும் பாதை தான்.

அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் நமக்கு கடவுள் என்னக் கொடுத்திருக்கிறாரோ அதற்கு நன்றி சொன்னாலே நாம் சந்தோஷமாக இருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

நடிகர் ஷாம்

தொடர்ந்து பேசிய அவர், " நான் நடித்த படங்களில் இயற்கை படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பதற்கான ஒரு ஐடியா இருந்தது. ஆனால் ஜனா சாரின் மறைவால் அதை எடுக்க முடியாமல் போய்விட்டது. இயக்குநர் அகிலனிடம் இதுதொடர்பாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் படத்தை எடுக்கலாம் என்று சொன்னால் நிச்சயம் 'இயற்கை 2' வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

`மொஸார்ட், பீத்தோவன்... இப்போ இளையராஜா; இது அப்பாவின் நீண்டநாள் ஆசை' - கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி

லண்டனில் அப்பல்லோ அரங்கில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.இந்நிலையில் இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்த... மேலும் பார்க்க

Symphony: `நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன்; என்னைப்போல ஒருவர் இனி..!' - இளையராஜா பெருமிதம்

லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உரு... மேலும் பார்க்க

`34 நாட்களில் சிம்பொனி உருவாக்கி அரங்கேற்றம்; வரலாற்று பெருநிகழ்வு' - இளையராஜாவுக்கு சீமான் வாழ்த்து

லண்டனில் இந்த மாதம் மார்ச் 8ம் தேதி சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இளையராஜ... மேலும் பார்க்க

Dragon : `what a writing Ashwath' - ரஜினிகாந்த் பாராட்டு குறித்து அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மரிய... மேலும் பார்க்க

Dragon: `கனவு நிறைவேறிய நாள்..' - ரஜினி பாராட்டு குறித்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகிய... மேலும் பார்க்க