செய்திகள் :

Dragon : `what a writing Ashwath' - ரஜினிகாந்த் பாராட்டு குறித்து அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி!

post image

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், மிஸ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான் எனப் பலரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

டிராகன்

கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியான இந்த திரைப்படம், 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அஸ்வத் மாரிமுத்துவின் முந்தைய படமான ஓ மை கடவுளே திரைப்படமும் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே என்ற ஹிட் படத்தைத் தொடர்ந்து டிராகனில் நடித்திருந்ததால், இந்த படத்துக்கு முன்னரே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிறைவில் உள்ள படக்குழுவினரை இன்னும் சந்தோஷப்படுத்தியிருக்கிறது நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து.

'டிராகன்' படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி, இயக்குநர் அஸ்வத், பிரதீப், தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகிய மூவரையும் நேரில் தனது இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்

Ashwath ட்வீட்

ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் தளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

அவரது பதிவில் ரஜினிகாந்த் அவரிடம், "what a writing Ashwath ! Fantastic fantastic !!" என பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நல்ல படம் பண்ணனும், படத்த பாத்து ரஜினி சார் வீட்டுக்கு கூப்டு விஷ் பண்ணி நம்ம படத்த பத்தி பேசணும் !! இது டைரக்டர் ஆகணும்னு கஷ்டப்படுற ஒவ்வொரு உதவி இயக்குநருடைய கனவு! கனவு நிறைவேறிய நாள் இன்று ♥️" என்றும் எழுதியுள்ளார்.

`மொஸார்ட், பீத்தோவன்... இப்போ இளையராஜா; இது அப்பாவின் நீண்டநாள் ஆசை' - கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி

லண்டனில் அப்பல்லோ அரங்கில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.இந்நிலையில் இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்த... மேலும் பார்க்க

Symphony: `நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன்; என்னைப்போல ஒருவர் இனி..!' - இளையராஜா பெருமிதம்

லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உரு... மேலும் பார்க்க

`34 நாட்களில் சிம்பொனி உருவாக்கி அரங்கேற்றம்; வரலாற்று பெருநிகழ்வு' - இளையராஜாவுக்கு சீமான் வாழ்த்து

லண்டனில் இந்த மாதம் மார்ச் 8ம் தேதி சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் இளையராஜ... மேலும் பார்க்க

Asthram: 'நான் ஜட்ஜ் ஆக இருந்தபோது சிவகார்த்திகேயன் கன்டஸ்டன்ட், ஆனா..' - நடிகர் ஷாம் பேசியதென்ன?

நடிகர் ஷாம் தற்போது 'அஸ்திரம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அரவிந்த் ராஜகோபால் இயக்கி இருக்கிறார். இத்திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஷாம் செய்தியாளர்க... மேலும் பார்க்க

Dragon: `கனவு நிறைவேறிய நாள்..' - ரஜினி பாராட்டு குறித்து அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபமா, கயாடு லோகர் ஆகிய... மேலும் பார்க்க