செய்திகள் :

Aus v Ind : 'கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பௌலர்' - பும்ராவுக்கு மேக்ஸ்வெல் புகழாரம்

post image
கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பௌலராக பும்ரா மாறுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் பும்ராவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
Bumrah

'The Grade Cricketer Podcast' என்கிற தளத்துக்கு பேட்டியளித்திருக்கும் மேக்ஸ்வெல், 'கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த பௌலராக பும்ரா மாறுவார் என நம்புகிறேன். இதை அவரின் ரெக்கார்டுகளையும் நம்பர்களையும் வைத்து சொல்லவில்லை. அவரை எதிர்கொண்டிருக்கும் பேட்டர்களின் மனநிலையை வைத்து சொல்கிறேன். அவரை எதிர்கொள்வது நிஜமாகவே கடினமான விஷயம். அவருக்கென பிரத்யேகமாக ஒருவித ஸ்டைல் இருக்கிறது. அவரால் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடியும். அவுட் சைடு மற்றும் இன்சைட் எட்ஜ் ஆக்கவும் முடியும். அவருடைய வேகத்தை மட்டுமே வைத்தும் தடுமாறச் செய்ய முடியும். ஸ்லோயர் ஒன்களையும் வீரியமாக வீசக்கூடியவர்.' என மேக்ஸ்வெல் ஏகத்துக்கும் பும்ராவை புகழ்ந்திருக்கிறார்.

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் கூட இந்திய அணி பும்ராவின் அசாத்தியமான ஆட்டத்தால்தான் வெற்றியைப் பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதையுமே கூட பும்ராதான் வென்றிருந்தார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையையே கூட பும்ராவால்தான் இந்தியா வென்றிருந்தது. இந்திய அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக பும்ரா இப்போது மாறியிருக்கிறார்.

Jasprit Bumrah

கிரிக்கெட் உலகமே பும்ராவை புகழ்ந்து வருகையில் மேக்ஸ்வெல் புகழ்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை தானே.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

CSK : 'பணத்தை விட நமக்கான மதிப்புதான் முக்கியம்' - சிஎஸ்கேக்கு திரும்புவது பற்றி அஷ்வின் நெகிழ்ச்சி

தமிழக வீரரான அஷ்வினை ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இதன்மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்வின் சென்னை அணிக்கு திரும்பவிருக்கிறார். மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் ஆடப... மேலும் பார்க்க

Aus v Ind : 'அடிலெய்டு டெஸ்ட்டுக்காக ஆஸி அழைத்து வரும் அதிரடி ஆல்ரவுண்டர்' - யார் அந்த பௌ வெப்ஸ்டர்?

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்திருந்தது. இதில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகச்சிறப்பாக வென்றிருந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் அடுத்தப் போட்டி டிசம்பர் 6 ஆம்... மேலும் பார்க்க

Champions Trophy : 'இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர மறுப்பதில் நியாயமில்லை' - PCB சேர்மன் காட்டம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதைப் பற்றி ஐ.சி.சியின் நிர்வாகக்குழு ந... மேலும் பார்க்க

Phil Hughes : 'உயிரைப் பறித்த அந்த ஒரு பவுன்சர்!' - `63 Not Out' பிலிப் ஹூயூஸ் நினைவுகள்!

ஒரு கிரிக்கெட் மட்டையால், ஒரு கிரிக்கெட் பந்தால் எதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும்? நடராஜன் மாதிரியான வீரருக்கு ஒரு பந்தால் ஒரு புது வாழ்க்கையையே உருவாக்கிக் கொடுக்க முடியும். வெறும் கனவுகளை மட்டும... மேலும் பார்க்க

World Chess Championship: '23 வது நகர்விலேயே டிரா செய்த லிரன் - குகேஷ்... 2ம் சுற்றில் என்ன நடந்தது?

சிங்கப்பூரில் நடந்து வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாம் சுற்று நேற்று நடந்திருந்தது. முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் டிங் லிரன் வென்றிருந்தார். இந்நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று ட... மேலும் பார்க்க