செய்திகள் :

AUSvIND: `ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினாலே அவுட்' - கோலியின் தவறு தொடர்கிறதா?

post image
நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் மிகப்பெரிய ஏமாற்றமாக மாறி நிற்கிறார் விராட் கோலி. பெர்த்தின் இரண்டாம் இன்னிங்ஸில் அழுத்தமே இல்லாத சூழலில் ஒரு சதம் அடித்ததோடு சரி, மற்ற எல்லா இன்னிங்ஸ்களிலும் சொதப்பல்தான். அதிலும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினாலே பேட்டை விட்டு அவுட் ஆகிவிடுவேன் என ஆடிக்கொண்டிருக்கிறார். செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருக்கிறார். கோலி எங்கேதான் சொதப்புகிறார்?

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கவர் ட்ரைவே இல்லாமல் சச்சின் ஆடிய 241* இன்னிங்ஸை முன்னுதாரணமாக வைத்து கோலியை விமர்சனம் செய்து வருகின்றனர். காரணம், ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளுக்கு மட்டும் இந்தத் தொடரில் 4 முறை அவுட் ஆகியிருக்கிறார். நிதானமாக லீவ் செய்யவேண்டிய பந்துகளுக்கு பேட்டை விட்டு அவுட் ஆகிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் சச்சினின் அந்த 241* இன்னிங்ஸை முன்வைத்து கோலியை விமர்சிக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியும் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவதைத்தான் அவருக்கான வியூகமாக வகுத்திருக்கிறது. 2000+ பந்துகளுக்கு முன்பாகத்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக lbw ஆகியிருக்கிறார். அதேமாதிரி 1500+ பந்துகளுக்கு முன்பாகத்தான் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்டம்பை பறிகொடுத்திருக்கிறார். மற்ற எல்லாமே கேட்ச்சுகள்தான். பெரும்பாலும் ஸ்லிப்பில் மட்டுமே கேட்ச் ஆகியிருக்கிறார்.

இதிலிருந்து ஆஸ்திரேலிய அணி கோலிக்கு வைத்திருக்கும் வியூகத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் கோலிக்கு எதிராக ஸ்டம்ப் லைனில் வீசுவதே இல்லை. ஏறக்குறைய எல்லா பந்துகளையும் ஸ்டம்புக்கு வெளியேதான் வீசுகிறார்கள். கடந்த 2 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களின் போதும் கோலிக்கு 94 சதவிகித பந்துகளை ஆப் ஸ்டம்புக்கு வெளியேதான் வீசியிருக்கிறார்கள். சதவிகித பந்துகள் மட்டும்தான் ஸ்டம்ப் லைனில் வந்திருக்கிறது. ஆக, கோலிக்கு எதிராக ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீச வேண்டும் என்பதைத் திட்டமாக வைத்துதான் அவர்கள் நீண்ட காலமாக செயல்படுகிறார்கள். நவீன கிரிக்கெட் சூழலில் இந்திய அணியின் அனலிஸ்ட்களே கோலியின் இந்த வீக்னஸை நோட்ஸ் போட்டு அவரிடம் கொடுத்திருப்பார்கள். கோலிக்கும் தன்னுடைய வீக்னெஸ் இதுதான் எனத் தெரிந்திருக்கும். ஆனாலும் அவரால் மீள முடியவில்லை.

Virat

டெஸ்ட் கிரிக்கெட் என்பதை `Art of Leaving the Ball' என்கிற விதத்தில் அடக்கிவிடலாம். எல்லா பந்துகளையும் அடித்து ஆட நினைக்காமல் நல்ல பந்துகளை அப்படியே தொடாமல் கீப்பரின் கையில் தஞ்சமடைய வைக்க வேண்டும். பந்தை விரட்டிச் சென்று ஷாட் ஆடாமல், ஏதுவான பந்து வரும் வரை காத்திருந்து ஷாட் ஆட வேண்டும். இந்த விஷயத்தில்தான் விராட் கோலி சறுக்குகிறார். ஆனால், இதற்கு சச்சினிடமிருந்தெல்லாம் கோலி உதாரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அவரிடமே இதற்கான விடையும் படிப்பினையும் இருக்கிறது.

2011 இல் உலகக்கோப்பையை வென்ற சமயத்தில்தான் விராட் கோலி டெஸ்ட்டுக்கும் அறிமுகமாகிறார். 2014 வரைக்குமே மிகச்சிறப்பாக ஆடுகிறார். இதன்பிறகு அவரது கரியரில் ஒரு 'Lean batch' உண்டாகியிருக்கும். குறிப்பாக, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கடுமையாகத் திணறியிருந்தார்.

ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை லீவ் செய்யாமல் விடாப்பிடியாக பேட்டை விட்டே கோலி அவுட் ஆனார். ஆண்டர்சனெல்லாம் கோலியின் விக்கெட்டை ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி சொல்லி எடுத்தார். கோலியின் கரியரில் மிகமோசமான தொடர் அது. ஆனால், கோலி அங்கேயே தேங்கிவிடவில்லை. ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி தன்னை திணறடிக்கிறார்கள். அதுதான் தனக்கான பொறி என்பதை உணர்ந்துகொண்டார். சச்சினுடன் இணைந்து பிரத்யேக பயிற்சிகளில் ஈடுபட்டு அந்த பிரச்னைக்கு விடை காண்கிறார். 2018 இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார். நிறைய பந்துகளை லீவ் செய்து கச்சிதமாக ஆடினார். அந்தத் தொடரில் மட்டும் 593 ரன்களை சேர்த்து அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார்.

Virat
'2014 சுற்றுப்பயணத்தில் என்னுடைய அவுட் ஸ்விங்கர்களை கோலி துரத்திச் சென்று ஆடுவார். அதனால் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆவார். ஆனால், இப்போது கோலி இப்போது பந்துகளை நன்றாக லீவ் செய்கிறார். நிறைய பக்குவப்பட்டிருக்கிறார். தன்னை நோக்கி பந்து வரும் வரை காத்திருக்கிறார். அப்படி வரும்போது வலுவான ஷாட்களை ஆடுகிறார்.' என அந்த 2018 தொடரில் ஆண்டர்சனே கோலியைப் பாராட்டியிருந்தார்.

ஆக, கோலி இப்போது எதிர்கொள்ளும் பிரச்னை ஒன்றும் புதிதானதல்ல. ஏற்கெனவே, அவர் இந்த மாதிரியான பிரச்னையில் சிக்கி அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டும் வந்திருக்கிறார்.

பந்துகளை லீவ் செய்வது மற்றும் ஷாட்டுக்கான Foot work சம்பந்தமாக சச்சின், 'Foot Work என்பது கால்கள் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது மனநிலை சம்பந்தப்பட்ட விஷயம்.' என்பார். பந்துகளை லீவ் செய்வதும், ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளுக்கு பேட்டை விடாமல் இருப்பதும் மனநிலை சார்ந்த விஷயம். கோலி நிறையவே பக்குவப்பட்டிருக்கிறார்.

Virat

கிரிக்கெட் அவருக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. சுய ஈகோவையும் கிரிக்கெட்டையும் மையப்படுத்தி உலகக்கோப்பையை வென்றுவிட்டு அவர் பேசிய பேச்சுதான் அதற்கான சாட்சி. அப்படியிருந்தும் கோலி தொடர்ந்து சொதப்புவதுதான் ஆச்சர்யம். மீண்டு வாருங்கள் கோலி!

கோலியின் இந்த தடுமாற்றம் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்

Follow On Rules: ஃபாலோ-ஆன் என்றால் என்ன? - இந்தியாவைக் காப்பாற்றிய பும்ரா - ஆகாஷ் தீப் ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்து வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த டெஸ்டில் பரிதாபகரமாகத் தோ... மேலும் பார்க்க

AUSvIND: திடீர் காயம்; போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ஹேசல்வுட் - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் மூன்றாவது போட்டியின் இடையிலேயே காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்ச... மேலும் பார்க்க

Virat Kohli: 'சச்சினிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் கோலி' - கவாஸ்கர் சொல்லும் அட்வைஸ்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைப்பெற்று வருகிறது.இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் இருக்கிறது. தற்போது மூன்றா... மேலும் பார்க்க

Sachin 241* : `11 ஆஸ்திரேலியர்கள் vs ஒற்றை சச்சின்!' - கவர் ட்ரைவே இல்லாமல் ஆடிய க்ளாஸ் இன்னிங்ஸ்!

பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மீண்டும் சொதப்பியிருக்கிறார். அதுவும் அவரது வழக்கமான பாணியில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு பேட்டை விட்டு அவுட் ஆகியிருக்கிறார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலக... மேலும் பார்க்க

Bumrah: `கூகுளில் தேடிப்பாருங்கள்’ - பேட்டிங் குறித்த கேள்விக்கு கெத்தாக பதில் சொன்ன பும்ரா

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாம் நாள் போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பும்ராவின் பேட்டிங் குறித்து கேள்வி எழுப்பிய ஒருவருக்கு கெத்தாக பதிலளித்துள்ளார் பும்ரா.பிரிஸ்பேனில் ந... மேலும் பார்க்க

WPL 2025: 16 வயது மதுர பொண்ணு... ரூ.1.60 கோடிக்கு ஏலம் எடுத்த மும்பை அணி - யார் இந்த கமலினி?

2008-இல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 17 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே மகளிர் பிரீமியர் லீக் (WPL) என்ற கிரிக்கெட் தொடரை பிசிசி... மேலும் பார்க்க