கடற்கரை-தாம்பரம் 28 மின்சார ரயில்கள் ரத்து: புகா் ரயில் அட்டவணையில் மாற்றம்
Basics of Share Market 20: முதலீடு செய்ய தெரிந்துகொள்ள வேண்டிய ஃபார்முலாக்கள்!
இதுவரையிலான அத்தியாயங்களில், 'பங்குச்சந்தை' என்பது முதலீட்டு தளம் என்பதை நாம் தெரிந்திருப்போம். முதலீடு என்று வந்த உடன், நம் வருமானம் அத்தனையையும் முதலீடு செய்துவிட முடியாது.
அதற்காக தனி கோல்டன் ரூல் இருக்கிறது, அது 50 - 30 - 20. அதாவது உங்கள் வருமானத்தில் 50 சதவிகிதத்தை வீட்டு வாடகை, இ.எம்.ஐ, மளிகைப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய விஷயங்களுக்கு ஒதுக்கி விட வேண்டும். 30 சதவிகிதத்தை பொழுதுபோக்கு, ஹோட்டல் போன்ற ஆடம்பர விஷயங்களுக்கு செலவளிக்கலாம். மீதி உள்ள 20 சதவிகிதத்தை முதலீட்டிற்கு ஒதுக்குங்கள்.
20 சதவிகித முதலீட்டிலும் முழு தொகையையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்துவிடக் கூடாது. அனைவருக்கும் தெரிந்ததுதான் காரணம். ஆம்...ரிஸ்க் தான் காரணம். நாம் முதலீடு செய்த தொகை எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. அதனால், அதற்கு இந்த ஃபார்முலாவை பயன்படுத்துங்கள்...100 மைனஸ் உங்கள் வயது.
உங்கள் வயது 30 என்று வைத்துக்கொள்வோம். 100 மைனஸ் 30 = 70 ஆகும். ஆக, 70 சதவிகித தொகையை பங்குச்சந்தையிலும், மீதி 30 சதவிகிதத்தை தங்கம், நிலம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்யலாம்.
வயது 70 என்றால், 100 மைனஸ் 70 = 30. இப்போது 30 சதவிகிதத்தை பங்குச்சந்தையிலும், மீதி 70 சதவிகிதத்தை பாதுகாப்பான முதலீடுகளிலும் முதலீடு செய்ய வேண்டும்.
வயது அதிகம் ஆக ஆக, ரிஸ்க்குகளை குறைக்க வேண்டும் என்பது தான் இந்த ஃபார்முலாவின் கொள்கையே. இப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்ய இருப்பவர்கள், கட்டாயம் இந்த ஃபார்முலாவை ஃபோலோ பண்ணிடுங்க மக்களே...
நாளை: கான்டிராக்ட் நோட், ROI,... - இன்னும் சில பங்குச்சந்தை வார்த்தைகள்