CHENNAI Spot: `SEANZ CRUISE' சென்னை ஈ.சி.ஆரில் ஆரம்பமாகவுள்ள கப்பல் சவாரி | Phot...
சாலை, பேருந்து நிழற்கூரை பணி தொடக்கம்
ஆம்பூா் அருகே கிராமங்களில் சிமெண்ட் சாலை, பேருந்து நிழற்கூரை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் பிரியதா்ஷினி நிதி தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.25 லட்சத்தில் மேல்குப்பம், குமாரமங்கலம், வெங்கடேசமுத்திரம், சின்னப்பள்ளிகுப்பம் கிராமங்களில் சிமெண்ட் சாலை, மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் பேருந்து நிழற்கூரை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் வி.எஸ். ஞானவேலன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சாவித்ரி, ராஜேந்திரன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.