Basics of Share Market 40: 'இன்டெக்ஸ் ஃபண்ட்... இ.டி.எஃப்' - யார் எதில் முதலீடு செய்யலாம்?
தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் எந்த முதலீடு நல்லது என்பதைப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இன்று 'இன்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாமால்... இ.டி.எஃப் அதாவது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டில் முதலீடு செய்யலாமா என்பதைப் பார்ப்போம்.
இன்டெக்ஸ் ஃபண்ட் என்றால், நேற்று பார்த்ததுபோல், சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்டெக்ஸ் சார்ந்து முதலீடு செய்யப்படுவது. இது எஸ்.ஐ.பி முறை. இதன் தொகை அதிகமாகும். ஆனால், பிற மியூச்சுவல் ஃபண்டுகளைவிடக் குறைவு.
இ.டி.எஃப் என்பது பங்குச்சந்தையில் வர்த்தகம் ஆகும் ஒரு ஃபண்ட். அதை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்... விற்கலாம். இதில் எஸ்.ஐ.பி முறை இல்லை. இதன் தொகை இன்டெக்ஸ் ஃபண்டை ஒப்பிடும்போது குறைவு. ஆனால், இதற்கான ஸ்டாம்ப் டுயூட்டி, ஜி.எஸ்.டி போன்ற வரிகள் உண்டு.
யார் எதில் முதலீடு செய்யலாம்?
இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டிற்கு பான் மற்றும் ஆதார் எண் இருந்தாலே போதுமானது. அதனால், புதிதாக முதலீட்டில் ஈடுபடுபவர்கள் தாராளமாக இன்டெக்ஸ் ஃபண்ட் முதலீடு செய்யலாம். இதில் ரிஸ்க்கும் சற்று குறைவு.
இ.டி.எஃப் முதலீட்டிற்கு டீமேட் கணக்கு தேவை. மேலும், நீங்கள் டீமேட் கணக்குப் பராமரிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.300 முதல் ரூ.500 செலுத்தி வருவதால் இதில் முதலீடு செய்யமுடியும். ஆனால், இன்டெக்ஸ் ஃபண்ட், இ.டி.எஃப் ஒப்பிட்டு பார்க்கும்போது, இ.டி.எஃப்பில் ரிஸ்க் அதிகமாகும். இதில் முதலீடு செய்ய கொஞ்சம் சந்தையை தெரிந்திருந்தால் நல்லது என்பதால் நன்கு சந்தை தெரிந்தபின், புரிந்தபின் முதலீடு செய்தால் மிகவும் நல்லது.