செய்திகள் :

Beauty: பிம்பிள்கள் ஏன் வருகின்றன? சிம்பிளான இயற்கை தீர்வுகள் இதோ!

post image

சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளைச் சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல், மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சரியான பராமரிப்பின்மை, பொடுகுத்தொல்லை, காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துதல் போன்ற காரணங்களும் பருக்களை ஏற்படுத்துகின்றன.

Pimples (Representational Image)

13 வயது முதல் 30 வயது வரை பருக்கள் வரலாம். இந்த வயதைக் கடந்த பிறகும், சிலருக்குப் பருக்கள் வரலாம். பெண்களுக்கு, மாதவிலக்குச் சமயங்களில் மட்டும் பருக்கள் வந்து மறையும். சினைப்பையில் நீர்க்கட்டிகள் (PCOD) இருந்தாலும் பருக்கள் வரும்.

முகத்தில் மூக்கு ஓரங்கள், தாடை, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கறுப்பாகவோ, வெள்ளையாகவோ வரலாம். இதை ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் என்போம். சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றால் குருத்தாகத் தோன்றி, சீழ் பிடித்த கட்டிகளாக மாறுகின்றன. சிலருக்குப் பருக்கள் வலிக்கும். பருக்களைப் பிதுக்கி சீழ் எடுப்பது, அடிக்கடி தொட்டுப் பார்ப்பது, கிள்ளுவது போன்ற செயல்களால் பருக்கள் அதிகமாகும். சரும மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

Face wash I முகம் கழுவுதல்

சருமம் எண்ணெய்ப் பசையா, வறண்ட சருமமா, நார்மலா எனப் பார்த்து, அதற்கான ஃபேஸ் வாஷ்களை வாங்கி, ஒரு நாளுக்கு 2 அல்லது 3 முறை முகத்தைக் கழுவலாம்.

முகத்தைக் குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகத்துக்கு எனத் தனியாக ஒரு துண்டைப் பயன்படுத்த வேண்டும். கொழுப்பு, எண்ணெய் உணவுகளுக்கு 'தடா’ போடுவதன் மூலமும் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

கொதிக்கும் நீரில் கொழுந்து வேப்பிலையைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். பிறகு, துண்டால் முகத்தை ஒற்றி எடுத்து, குளிர்ந்த நீரால் கழுவலாம்.

புதினா, துளசி, வேப்பிலை ஆகியவற்றில் தலா நான்கு இலைகளை எடுத்து, இதனுடன் சிறிது மரிக்கொழுந்து சேர்த்து, சாறாக அரைத்து, கடலை மாவுடன் கலந்துகொள்ளவும். முகம், மூக்கு ஓரங்களில் இந்தச் சாற்றைப் பூசி, 10 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூடான நீரில் கழுவலாம்.

எங்குப் பருக்கள் மிகுதியாக இருக்கிறதோ, அந்த இடத்தில், அரைத்த பூண்டு விழுதைப் பூசி, 15 நிமிடங்களுக்குப் பின் கழுவலாம். முகம் முழுவதும் தடவக் கூடாது.

லவங்கம் 2, மிளகு 2, முல்தானிமட்டி அரை டீஸ்பூன் எடுத்து பசையாக்கி, பருக்களின் மேல் தடவலாம்.

ரோஜா இதழ்களைத் தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்து, ஆறவைக்கவும். இந்த நீரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, அடிக்கடி எடுத்து முகம் கழுவலாம். பருக்கள் வராது. முகத்திலும் பொலிவு கூடும்.

நீராவி

கொட்டைகள் நீக்கப்பட்ட தக்காளிச் சாறு 2 ஸ்பூன், ஜாதிக்காய்த் தூள், மாசிக்காய்த் தூள் தலா 1 டீஸ்பூன், சந்தனத்தூள் 2 சிட்டிகை இவற்றைக் கலந்து முகத்தில் பூசிவர, பருக்கள் மறையும். பயத்த மாவு ஒரு டீஸ்பூன், எலுமிச்சை இலை 2, வேப்பிலை 1, கஸ்தூரி மஞ்சள் அரை டீஸ்பூன் ஆகியவற்றை அரைத்து, பன்னீருடன் கலந்து முகத்தில் பூசலாம்.

வெள்ளரிச் சாறு மற்றும் கற்றாழை ஜெல்லை சம அளவில் எடுத்து, அதில் பார்லி பவுடர், முல்தானிமட்டி தலா 2 ஸ்பூன் கலந்து, மிக்ஸியில் அரைத்து, பருக்கள் வந்த இடங்களில் அடர்த்தியாகப் பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். பருக்கள் மறையும். வராமலும், பரவாமலும் தடுக்கப்படும்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி!

முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! 'முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள்... மேலும் பார்க்க

Helmet Hygiene: ஹெல்மெட்டை தலைமுடிக்கு ஃப்ரெண்டாக்க 5 டிப்ஸ்!

இன்று இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஓன்று, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் கேசப் பிரச்னை. வேர்ப்பகுதியில் ஏற்படும் பாதிப்பில் ஆரம்பித்து, கேச உதிர்வு, வறண்ட கேசம் என இதனால்... மேலும் பார்க்க

Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!

தயிர்... உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டிதான். எப்பட... மேலும் பார்க்க

Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்... மேலும் பார்க்க

Beauty Tips: ஆரஞ்சும் ஆவாரையும்... சும்மா பளபளன்னு இருப்பீங்க..!

பொடுகு நீங்கும்!கருத்த கார்மேகக் கூந்தலை விரும்புபவர்கள், தலா 200 கிராம் ஆவாரம்பூ, வெந்தயத்துடன் ஒரு கிலோ பயத்தம் பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலையில் எண்ணெயை நன்றாகச் சூடுபரக்கத் தேய... மேலும் பார்க்க

Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!

''மனதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்க... மேலும் பார்க்க