செய்திகள் :

BGT 2024-25: ``இந்தியா சிறந்த அணி; ஆனாலும் நாங்கள்..!'' - சவாலுக்குத் தயாரான பேட் கம்மின்ஸ்

post image

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இதில், நியூசிலாந்துடனான வரலாற்றுத் தோல்வியிலிருந்து மீண்டெழவும், தொடர்ச்சியாக 5-வது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யவும், ஒன்றிரண்டு சீனியர்களை மட்டும் வைத்துக்கொண்டு இளம் படையாக இறங்கியிருக்கிறது இந்தியா.

BGT 2024-25 - பேட் கம்மின்ஸ், ஜஸ்பிரித் பும்ரா

மறுபக்கம், இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்ற பேட் கம்மின்ஸ் அண்ட் கோ, சுமார் 10 ஆண்டுகளாக தன்வசப்படாத பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்லும் முனைப்பில் தயாராகியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. பவுலிங் யூனிட்டில் அதே பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் ஆகியோரும், பேட்டிங் யூனிட்டில் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஆகியோரும் பிரதானமாக இருக்கின்றனர். வார்னரின் வெற்றிடத்தை நிரப்ப நாதன் மெக்ஸ்வீனி (25) என்ற இளம் களமிறக்கவிருக்கிறது ஆஸ்திரேலியா.

இந்தப் படையுடன், நாளை பெர்த் மைதானத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ``அநேகமாகக் கடுமையான போட்டிகளில் ஒன்றாக இது இருக்கலாம். பார்டர் கவாஸ்கர் டிராபி ஒவ்வொரு தொடரிலும் கடும் போட்டியாகவே இருக்கும். ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடர் என்பது மிக அரிதானவை.

பேட் கம்மின்ஸ்

நீங்கள் சொந்த மண்ணில் விளையாடும்போது அது எப்போதும் அழுத்தமானதாகவே இருக்கும். எங்களில் பலர் கடந்த 2 - 3 தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் அங்கமாக இருந்திருக்கிறோம். எனவே, பார்டர் கவாஸ்கர் டிராபியை வெல்வது சிறப்பாக இருக்கும். அதேசமயம், உலகின் தலைசிறந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாங்கள் அனைவருமே தயாராக இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சவால்களிலும் முன்னேறிச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம்." என்று கூறினார்.

நாதன் மெக்ஸ்வீனி

மேலும், நாதன் மெக்ஸ்வீனி என்ற இளம் வீரர் குறித்து பேசிய பேட் கம்மின்ஸ், ``நாதன் மெக்ஸ்வீனி தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். டேவிட் வார்னர் போல ஆட முயற்சிக்கக் கூடாது. அது அவருடைய ஆட்டமும் அல்ல. பந்துவீச்சாளர்களை மீண்டும் மீண்டும் பந்து வீசச் செய்வதே அவரது பாணி." என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

IPL: 'ரிஷப் நீங்கள் எப்பவும்..!'- லக்னோவுக்கு செல்லும் பன்ட் குறித்து டெல்லி உரிமையாளரின் பதிவு

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது.இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் தரப்பில் 182 வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெ... மேலும் பார்க்க

Champions Trophy : இரண்டு நாளில் முக்கிய மீட்டிங்; சாம்பியன்ஸ் டிராபியை நடத்துமா பாகிஸ்தான்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தவிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தத் தொடரில் ஆட பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்பமாட்டோம் என பிசிசிஐ உறுதியாக கூ... மேலும் பார்க்க

Deepak Chahar: "என் இதயம் எப்போதும் CSK-வுடன் தான்.." - தீபக் சஹாரின் மனைவி நெகிழ்ச்சி

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில், ஐ.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பண்ட் ஏலம் போனது முதல் டேவிட் வார்னர், கேன் வி... மேலும் பார்க்க

Jaydev Unadkat: கைகொடுத்த SRH... IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனைப் படைத்த ஜெயதேவ் உனத்கட்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 18-வது சீசன் அடுத்தாண்டு நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாள்களாக (நவம்பர் 24,25) ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், இதுவரை யாரும... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து எழும் சர்ச்சைகள்; தந்தை சொல்வதென்ன?

ஐ.பி.எல் தொடங்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை கடந்த 17 சீசன்களில் இதுவரை யாரும் பெறாத சிறப்பை பீகாரைச் சேர்ந்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி இந்த ஐ.பி.எல் ஏலத்தில் பெற்றிருக்கிறார். தனது 9 வயதிலேயே கிரிக்கெட் அ... மேலும் பார்க்க

IPL 2025: ``ஒரு டீனேஜராக இங்கு வந்தேன்..'' - டெல்லி ரசிகர்களுக்கு ரிஷப் பண்ட்டின் எமோஷனல் நோட்!

IPL 2025: 9 ஆண்டுகள் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட அவர், ஏன் தக்கவைக்கப்படவில்லை என்... மேலும் பார்க்க