Bigg Boss 8 Grand Finale: "விஷால்னா யாருனு தெரியணும்... It's just a beginning" - விஷால்
கடந்த அக்டோபர் 6-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய 'பிக்பாஸ்' சீசன் 8 நிகழ்ச்சியின் 'Bigg Boss 8 Grand Finale' இன்று இரவு நடைபெற்ற வருகிறது.
மொத்தமாக 24 பேரில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் தோல்வியடைந்ததன் மூலம் மிட் வீக் எவிக்ஷனில் ஜாக்குலின் வெளியேற, பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ரயான் சௌந்தர்யா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
இறுதிப் போட்டியில் முத்து, சவிந்தர்யா, விஷால், பவித்ரா, ரயான் இருந்தனர். இதில் இதுவரை ரயான், பவித்ரா வெளியேறி இருக்கின்றனர். மூன்றாவது ஆளாக விஷால் வெளியேறியிருக்கிறார்.
எவிக்ஷனுக்குப் பிறகு பேசியிருக்கும் விஷால், "நான் வாழ்க்கை எப்பவுமே சீரியஸாக எடுத்ததில்லை. இந்த பிக் பாஸ் வீடுதான் எனக்கு பொறுப்பாகவும், சீரியஸாகவும் இருக்கக் கற்றுக்கொடுத்தது. இந்த வீட்டுல நான் யாருனு தெரிஞ்சுகிட்டு வெளியே போறேன். எல்லாரையும் எண்டர்டைமண்ட் பண்ணனும்னுதான் என்னோட ஆசை. அதை சிறப்பாக செய்வேன். ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. விஷால்னா யாருனு தெரியணும்னுதான் இங்க வந்தேன். அது நடந்திருச்சு" என்று பேசியிருக்கிறார்.