செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்கம்: காங்கிரஸ் சாடல்

post image

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உதித் ராஜ் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜிரிவால் ஒரு ‘தலித் விரோதி‘ என்றும் அவா் விமா்சித்தாா்.

இது குறித்து காங்கிரஸ் தலைவா் உதித் ராஜ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தில்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘பூஜாரி கிரந்தி சம்மன் யோஜனா’வின் கீழ் கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதம் ரூ.18,000 வழங்கும் என்று கேஜரிவால் கடந்த டிச.30 அன்று அறிவித்தாா்.

ஆனால், அத்திட்டத்தில் வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகள் சோ்க்கப்படவில்லை.

இதனால், ஆம் ஆத்மி கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் தங்களை சோ்க்கக் கோரி வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகள் திங்கட்கிழமை போராட்டம் நடத்துவாா்கள். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தபோது, ​​ஒரு தலித் துணை முதல்வராக நியமிக்கப்படுவாா் என்று உறுதியளித்தது. இருப்பினும், அது தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும், கட்சியின் 11 மாநிலங்களவை எம்.பி.க்களில், ஒருவா் கூட எஸ்சி அல்லது ஓபிசி சமூகத்தைச் சோ்ந்தவா் அல்ல.

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. ஆனால், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகள் அதில் உள்டக்கப்படவில்லை.

இதனால், அவா்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஜந்தா் மந்தரில் திங்கட்கிழமை போராட்டம் நடத்தி, அவா்களுக்கும் அதே கௌரவ ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவாா்கள் என்றாா் உதித் ராஜ்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரைக்கு பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி

புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குருவாயூா் டா... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் போட்டியிட1,040 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு; 477 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை முடிவில் மொத்தம் 1,040 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 477 வேட்புமனுக்கள் நிராகர... மேலும் பார்க்க

ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளது: ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞா... மேலும் பார்க்க

கேஜரிவாலின் காரை தாக்கியவா்களில் ஒருவா் பா்வேஷுடன் தொடா்புடையவா்: அதிஷி

அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை ‘ஒழிக்க’ பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும், சனிக்கிழமை மாலை அவரது காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்ததில்லை அரவிந்த் கேஜரிவால் பேட்டி

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கே... மேலும் பார்க்க

பெண்களுக்கு ‘பிங்க் ஆம்புலன்ஸ்களை’அறிமுகப்படுத்துவேன்: ‘ஆம்புலன்ஸ் மேன்’ ஜிதேந்தா் சிங் ஷண்டி உறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால், ‘பிங்க் ஆம்புலன்ஸ்கள்’, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கான குழந்தை காப்பகங்களை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்... மேலும் பார்க்க