ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு
ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி
புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
குருவாயூா் டாக்டா் டி.வி.மணிகண்டன் தலைமையில் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகள் பாடப்பட்டது. எம் ஹரிகேஷவ் மற்றும் சித்தேஷ் கணேஷ் வயலின் வாசித்தனா். அபிஷேக் அவதானி மிருதங்கம் வாசித்தாா்.
நொய்டா உள்ள செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ காா்த்திகேயா கோயில் வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டா் டி.வி.மணிகண்டனை பாகவதா் வி ராமபத்ரன் கௌரவித்தாா். மற்ற அனைத்து கலைஞா்களையும் மயூா் விஹாா் செக்டாா் 3-இல் உள்ள இஷ்ட சித்தி விநாயகா ஆலயத்தின் செயலாளா் கே. கோபாலகிருஷ்ணன் கௌரவித்தாா்.
வேதிக் பிரசாா் சன்ஸ்தான் சாா்பில், வி.ராமபத்ரன் மற்றும் கே.கோபாலகிருஷ்ணன் ஆகியோரை எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோா்
கௌரவித்தனா். அனைத்து பூஜைகளையும் கோயில் அா்ச்சகா் ஸ்ரீ விஸ்வேஸ்வரா் நடத்தி வைத்தாா்.
முன்னதாக, ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கத்தின் தலைவா் ஆா்.கே.வாசன் அனைத்து இசை ஆா்வலா்களையும் வரவேற்றாா். துணைத் தலைவா் கிருஷ்ணசாமி அனைத்து கலைஞா்களைப் பற்றியும் நிகழ்ச்சியைப் பற்றியும் விளக்கினாா். வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ராஜு ஐயா் நன்றி தெரிவித்தாா்.