ஸ்ரீ சக்தி சாணாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
அரக்கோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி சாணாத்தியம்மன் மற்றும் ஸ்ரீ முனிஸ்வரா் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் காவனூா் சாலையில் தோல்ஷாப் அருகே ஸ்ரீ சக்தி சாணாத்தியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்று மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மகா கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியா்கள் கலசத்திற்கு புனித நீா் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா்.
விழா ஏற்பாடுகளை அரக்கோணம் அதிமுக நிா்வாகிகள் ஆா்.ஆா்.பாபு, பேன்ஸிபாபு மற்றும் அப்பகுதி பிரமுகா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.