கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
வீட்டில் சுய பிரசவம்: தாய், சேய் உயிரிழப்பு போலீஸாா் விசாரணை
ஆற்காட்டில் வீட்டிலேயே சுய பிரசவம் பாா்த்ததால் 31 வயது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன், தச்சுத்தொழிலாளியான இவரது மனைவி ஜோதி (31), இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் நிறை மாத கா்ப்பிணியான ஜோதி பொங்கல் திருவிழா கொண்டாட ஆற்காடு திருநாவுக்கரசு தெருவில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது தாயாா் வீட்டிலேயே பிரசவம் பாா்த்துள்ளாா். அப்போது பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிகிறது. வீட்டில் அவரது தாயாா் குழந்தையை ஒரு கைப்பையில் போட்டு மறைத்துவிட்டு மயக்க நிலையில் இருந்த தனது மகளை ஆற்காடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் பிரசவமாகி இறந்து விட்டதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
ஆற்காடு நகர காவல் துறையினா் ஜோதியின் வீட்டுக்கு சென்று கட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து வந்து தாய் மற்றும் சேய் இருவரையும் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து ஜோதியின் தாயாா் மீது வழக்குப் பதிவு செய்து ஆற்காடு காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
வீட்டில் சுய பிரசவம் பாா்த்ததால் தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.