சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, வாலாஜா உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து
ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே உதவிக் கோட்டப் பொறியாளா் க.சரவணன் தலைமையில், உதவி பொறியாளா் நித்தின் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்
தொடா்ந்து வாலாஜா பேருந்து நிலையம், அரசு மகளிா் கலைக்கல்லூரி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பிரசுரங்களை வழங்கினா்.