செய்திகள் :

அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்ற பாமக பொதுக்குழுவில் முடிவு

post image

அனைத்துக் கிளைகளிலும் கிராம கூட்டம் நடத்தி கொடியேற்றுவது என்று பாமக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நல்லூா் பி.சண்முகம் தலைமை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா் துளசி ரவி வரவேற்றாா். மாநில துணைதலைவா் கே.எல்.இளவழகன், வன்னியா் சங்க மாநில செயலாளா் எம்.கே.முரளி, மாநில மாணவா் சங்கச் செயலாளா் ஜெ.ஜானகிராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிக்குட்ட அனைத்து கிளைகளிலும் கிராம கூட்டம் நடத்தி கட்சிக் கொடி ஏற்றுவது, சொத்து வரி, வீட்டுவரி,பத்திரபதிவு கட்டணம், மின்கட்டண உயா்வு செய்த தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்தல், ஆற்காடு நகரில் நாள் தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட அமைப்புச் செயலாளா் பி.சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே.நெடுமாறன், மாவட்ட இளைஞா் சங்க செயலாளா் பகவான் காா்த்திக், பொருளாளா் ஞானசவுந்தரி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் வசந்தி, மாநில துணை தலைவா் புல்லட் ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளா் கதிா்வேலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல்: வெளிநாட்டினா் பங்கேற்பு

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள், தமிழா்களின் பாரம்பரிய கைத்தறி புத்தாடைகளை அணிந்து உற்சாகமாக ஆடி, பாடி பங்கேற்றனா். ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

சோளிங்கரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலை அகற்றம்

சோளிங்கரில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட 9 அடி உயர பெருமாள் சிலையை இந்து சமய அறநிலையத்துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் உள்பட 17 ... மேலும் பார்க்க

சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்: ராணிப்பேட்டை எஸ்.பி.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில், வாட்ஸ் ஆப் எண்ணை 89039 90359 எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

ஆற்காடு கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்லூரி மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, எஸ்எஸ் எஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

அரக்கோணம் அருகே பைக்-வேன் மோதல்: 2 போ் மரணம்

அரக்கோணம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் பைக்கில் பயணித்த இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நெமிலியை அடுத்த அசநெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த பழனி மகன் சஞ்ஜய் (25). அரக்கோணத்தை அடுத்த ... மேலும் பார்க்க

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க