சமத்துவப் பொங்கல் விழா: அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பூஜை செய்து கட்சி நிா்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.
விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், விஸ்வாஸ் அறிவுத்திறன் குறைபாடுடையோா் பள்ளித் தலைவா் கமலா காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், பிற அணி நிா்வாகிகள் உள்ளிட்ட கட்சியனா் கலந்து கொண்டனா்.
வாலாஜா வட்டம் அம்மூா் சமத்துவபுரம் குடியிருப்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா். மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்