செய்திகள் :

Bison: "நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து நான் எடுத்தப்படம் பைசன்தான்"- மாரி செல்வராஜ்

post image

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

'பைசன்'
'பைசன்'

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.

இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது.

அப்போது பேசிய மாரி செல்வராஜ், " என்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து எடுத்தப்படம் பைசன்தான்.

மணத்தி கணேசன் அண்ணா எனக்கு சொந்தக்காரர். சிறுவயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும்.

அவர்தான் அன்றைக்கு எனக்கு ஹீரோ. அவர் கபடி விளையாடும்போது முன் வரிசையில் அமர்ந்து பார்ப்போம்.

அவரை படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றியதில்லை.

மணத்தி கணேசன் அண்ணனின் வெற்றி அவருடைய உழைப்பு, பயணம், ஸ்போர்ட்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் எதர்ச்சியாக சந்திக்கும்போது பேசினோம்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

அப்போது தான் அவரிடம் கேட்டேன் உங்கள் வாழ்க்கையின் கருவை எடுத்துக்கொண்டு நான் ஒரு படம் பண்ணலாமா? என்று கேட்டேன்.

அதற்கு அவர் 'உன் மீது நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது'. அதனால் படத்தை எடு என்று சொன்னார்.

அவருடைய வெற்றி, உழைப்பு, கபடி இதையெல்லாம் எடுத்துக்கொண்டு நான் எடுக்க ஆசைப்பட்ட கதையையும் வைத்து புனைவாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

Vishal: `அது வதந்தி!' - விஷால் `மகுடம்' படத்தை இயக்குவதாக பரவிய தகவல்களுக்கு இயக்குநர் பதில்!

ஈட்டி', ஐங்கரன்' படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தற்போது மகுடம்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99-வது திரைப்படம். இப்படத்தில் விஷாலு... மேலும் பார்க்க

Bison: ``எந்த நிகழ்வுகளும் உண்மையாகக் காட்டப்படவில்லை!" - ரிலீஸுக்கு முன் மாரி செல்வராஜ் அறிக்கை!

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் `பைசன்' திரைப்படம் என இத்திரைப்படம் தொடங்... மேலும் பார்க்க

Arasan: ``தனுஷை நடிக்க வைங்க சார்!" - திரையரங்குகளில் வெளியான `அரசன்' பட புரோமோ!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' படத்தின் பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த `அரசன்' திரைப்படமும் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன... மேலும் பார்க்க

Dhanush: ``படம் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி" - அண்ணாமலைக்கு நன்றி சொன்ன நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்தப்படம் இட்லி கடை. இது அவர் இயக்கத்தில் வெளிவந்த 4-வது திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, இளவரச... மேலும் பார்க்க

Bison: "பா.ரஞ்சித் அரசியலுக்கு வருவாரா?"- மாரி செல்வராஜ் சொன்ன பதில்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்த... மேலும் பார்க்க

'இன்பநிதியை வைத்து அடுத்தப் படம் எடுக்கிறாரா?'- மாரி செல்வராஜ் அளித்த விளக்கம்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்த... மேலும் பார்க்க