செய்திகள் :

Bison : மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் படத்தின் First Look வெளியானது!

post image

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இன்று (மார்ச் 7) வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ட்ராமா வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் இரண்டு துருவ் விக்ரம் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் அவர் குனிந்திருக்கும்படியும், மற்றொன்றில் அவர் பந்தையத்துக்குத் தயாராக இருக்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பின்புறம் கொம்புடன் கூடிய எருமையின் தலையும் இடம்பெற்றுள்ளது.

Bison

பைசன் படத்தில் கூடுதலாக கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி திரு படத்தொகுப்பு செய்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் சென்னையில் Bison படத்துக்கான படபிடிப்பு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள மாரி செல்வராஜ், முதன்முறையாக டக்கர், தேவராட்டம், சேதுபதி படங்களுக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னாவுடன் இணைந்துள்ளார்.

பைசன் படபிடிப்பில்

இந்த படத்தை நீலம் ஸ்டூடியோஸ், அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. ஆதித்ய வர்மா, மகான் படங்களுக்குப் பிறகு துருவ் நடிக்கும் இந்த திரைப்படம் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாரி செல்வராஜ் பதிவு

பைசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தைப் பகிர்ந்த மாரி செல்வராஜ்,

நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்

ஏன் வருகிறேன் என்றும்

உனக்கு தெரியும்

வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்

ஆதலால் ….

நீ கதவுகளை அடைக்கிறாய்

நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.

என்ற கவிதையை சேர்த்துள்ளார்.

Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சௌந்தர்யா-விசாகன்அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு... மேலும் பார்க்க

Vijay: `ஜனநாயகன் விஜய் எப்படி?!' - விருது விழாவில் பாபி தியோல்

`கங்குவா' திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் `ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். `கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த பாலிவுட் நடிகர் `ஜன நாயகன்' படத்... மேலும் பார்க்க

Sangeetha: `25 வருட இடைவெளிக்குப் பிறகு' - கம்பேக் கொடுக்கும் `பூவே உனக்காக' சங்கீதா

25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் நடிகை சங்கீதா.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வந்த நேரத்திலேயே `பூவே உனக்காக' சங்கீதா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்... மேலும் பார்க்க

Kushboo - Sundar.C : `லவ் யூ சுந்தரா!' 25-வது திருமண நாள் குறித்து குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு

சுந்தர். சி - குஷ்பு தம்பதிக்கும் 25-வது திருமண நாள் இன்று!இன்று காலை பழநி முருகன் கோயிலில் இயக்குநர் சுந்தர்.சி முடிகாணிக்கைச் செலுத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தியிருந்தார். 25-வது திருமண நாளைக் கொண்... மேலும் பார்க்க

சுந்தர்.சி -குஷ்புவின் 25 ஆம் ஆண்டு திருமண நாள்; பழனியில் தரிசனம் செய்த குடும்பம் |Photo Album

நடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதிநடிகர் தம்பதி மேலும் பார்க்க