செய்திகள் :

Bombay: `பாம்பே படம் இன்று வெளியானால்... நாட்டின் சகிப்புத்தன்மை?’ - ராஜீவ் மேனன் ஓப்பன் டாக்

post image

மணிரத்னத்தின் 'பாம்பே' படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``பாம்பே திரைப்படத்தின் உயிரே உயிரே பாடலில் கதாநாயகி காதலனை தேடிப் போகும்போது அவர் அணிந்திருக்கும் புர்கா அகற்றுவது அவர் மதத்தைக் கடந்து காதலனிடம் செல்வதாகவும், அதில் உள்நோக்கம் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.

பாம்பே பாடக் காட்சி
பாம்பே பாடக் காட்சி

ஆனால், உண்மையில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடம் கடற்படையில் இருந்த என் தந்தையின் நண்பர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய இடம். அந்தப் பாடலில் நாயகி முழுவதும் கருப்பு நிற உடையில் வருவார். வேறு யாரும் அந்தப் பாடல் கட்சியில் இருக்கமாட்டார்கள்.

`இப்போது எடுக்க முடியாது’

ஒரே இடம், நாயகன், நாயகி என பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் நாயகி நீல நிற உடை அணிந்திருந்ததை கவனித்து, அந்த உடை இந்தப் பாடலில் இருந்தால் காட்சி அமைப்பு நன்றாக இருக்கும் என கருதினேன்.

ராஜீவ் மேனன் - மணிரத்னம்
ராஜீவ் மேனன் - மணிரத்னம்

அதனால்தான் இல்லாத நங்கூரத்தை அங்கு அமைத்து நாயகியின் ஆடை கிழிவதாக காட்சி வைத்தோம். பாம்பே படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 30 ஆண்டுகளில் நாட்டின் சகிப்புத் தன்மை அதிதீவிரமாக குறைந்திருக்கிறது. மதம் சார்ந்து மக்கள் மிகவும் தீவிர நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் பெரிய பிரச்னையாகிவிட்டது. பாம்பே போன்ற ஒரு படத்தை நீங்கள் இப்போது எடுக்கவும் முடியாது. அதை திரையரங்கில் வெளியிடலாம் என நினைத்தாலே தியேட்டர் எரிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் கார் சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெண் உள்... மேலும் பார்க்க

XEV 9E: "இந்த காருக்கான சவுண்டை நாங்கள் உருவாக்கினோம்" - ரஹ்மானின் இன்ஸ்டா பதிவு வைரலாக காரணம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக அவர் முன்பு வெளியி... மேலும் பார்க்க

Thug Life: "நான் ராமர் இல்ல; ராமரின் அப்பா வகையறா" - திருமணம் குறித்த கேள்விக்குக் கமல் ஹாசன் பதில்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்ட... மேலும் பார்க்க