சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!
Chennai Fog : சென்னையில் கடும் பனிமூட்டம்... விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி
சென்னையில் இன்று அதிகாலை முதல் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவை பாதிப்புக்குள்ளாகின.
பனிமூட்டத்தால் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. மேலும், சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டத்தால், 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
குவைத்திலிருந்து பயணிகளுடன் வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து. அதோடு, இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. செங்கல்பட்டிலிருந்து கடற்கரை மார்க்கமாகச் செல்லும் ரயில்கள் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
இதனால், புறநகர் ரயில்களில் பயணித்து வேலைக்குச் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம் பாக்கம் உள்ளிட்ட புறநகர் முழுவதும் சாலைகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.