முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி
Credit Card: `இனி 30 சதவிகிதம் கிடையாது...' - கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களே உஷார்
கிரெடிட் கார்டு பில்லை தாமதமாக கட்டினால் 30 சதவிகிதத்திற்கு மேல் வங்கிகள் வட்டி வசூலிக்கக்கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை மாற்றி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், 'கிரெடிட் கார்ட் பில்லை நேரத்திற்கு முழுவதும் கட்ட தவறியவர்கள் அல்லது குறைந்தபட்ச நிலுவை தொகையை மட்டும் கட்டியவர்களிடம் இருந்து ஆண்டுக்கு 30 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிப்பது நியாயமற்றது' என்று தீர்ப்பு வழங்கியது.
'வட்டி பற்றி நடைமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி தான் பிற வங்கிகளுக்கு ஆணையிட முடியும். இதை குறை தீர்ப்பு ஆணையம் சொல்வது முறையல்ல. மேலும், சரியாக பில்லைக் கட்டாத வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாமல் பில்லைக் கட்ட 45 நாட்கள் தரப்படுகிறது. இதை ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை' என்று ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
கடந்த வெள்ளிக்கிழமை, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, இனி வங்கிகள் தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டியதில்லை. வங்கிகள் அவர்கள் நடைமுறைக்கு ஏற்ப பில் தொகையை சரியாக கட்டத் தவறியவர்களிடம் இருந்து வட்டி வசூலிக்கலாம்.