ரூ. 3,87,000 வழிப்பறி கொள்ளை; போலீஸில் பொய் புகார்... நாடகம்; நிறுவன ஊழியர் சிக்...
CSK: 'ஏலத்தில் முறைகேடு; CSK வுக்கு மட்டும் சாதகமான அம்பையர்கள்' - குற்றம்சாட்டும் லலித் மோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் மீது லலித் மோடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தும் அதன் உரிமையாளர் சீனிவாசன் குறித்தும் யூடியூப் சேனலுக்கு ஐ.பி.ல் முன்னாள் தலைவரும் பிசிசிஐயின் முன்னாள் துணைத் தலைவருமான லலித் மோடி பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் குறித்துப் பேசிய லலித் மோடி, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும் இருந்தார். அப்போது பல மோசடிகளை அவர் செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளுக்கு அவர்களுக்குச் சாதகமான அம்பையர்கள்தான் நியமிக்கப்பட்டனர்.
அது தவறாக இருந்தது. அதனை வெளிப்படையாகக் கேள்வி கேட்டபோது, அவர் எனக்கு எதிராகத் திரும்பினார். இவ்வளவு ஏன், ஐ.பி.எல் ஏலத்தில் கூட அவர் ஃபிக்ஸிங் செய்தார். அவர் சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து வீரர் ஃபிளின்டாஃப் வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.
அதனால் அத்தனை அணிகளிடமும் அவரை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது" என்று கூறியிருக்கிறார். லலித் மோடியின் இந்த குற்றச்சாட்டுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...