செய்திகள் :

CSK: `பிளெமிங் உட்பட அணி நிர்வாகம் செய்த மிஸ்டேக்’ - சிஎஸ்கே செயல்பாடு குறித்து ரெய்னா அதிருப்தி

post image

சிஎஸ்கே அணி ஐ.பி.எல்லில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு படுமோசமாக இந்த சீசனில் ஆடிவருகிறது. 8 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.

குறிப்பாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்தது. தோனி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு 3 போட்டிகளில் 2-ல் சென்னை தோல்வியடைந்திருக்கிறது.

இன்னும் ஆறு போட்டிகள் மிஞ்சிருக்கும் நிலையில், அவையனைத்திலும் வெற்றிபெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கடினமான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.

csk
csk

மற்ற அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 7 போட்டிகள் ஆடி தங்களின் முழுமையான பிளெயிங் லெவனை கட்டமைத்துவிட்டது.

ஆனால், சென்னை அணி மட்டும்தான் இன்னுமே கூட பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் எந்த பிளேயரை உள்ளே இறக்குவது என்பதில் தடுமாறிவருகிறது.

ஏலத்தில் நிறைய ஆப்ஷன்கள் இருந்தும் சரியான வீரர்களை அணி நிர்வாகம் எடுக்காததே முக்கிய கரணம் என்று பலரும் சிஎஸ்கே-வை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

`சி.எஸ்.கே இவ்வாறு தடுமாறி நான் பார்த்ததில்லை’

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் ரெய்னா, "மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரை நீங்கள் (சிஎஸ்கே நிர்வாகம்) விட்டுவிட்டீர்கள். ஏலத்தில் நல்ல வீரர்கள் நிறை பேர் இருந்தனர்.

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

இருப்பினும், தலைமைப் பயிற்சியாளர் உட்பட ஒட்டுமொத்த அணி நிர்வாகமும், ஏலத்தில் நல்ல வீரர்களுக்குச் செல்லவில்லை. இத்தனைக்கும் சி.எஸ்.கே-விடம் பணமும் இருந்தது. ஐ.பி.எல்லில் இதற்கு முன்பு சி.எஸ்.கே இவ்வாறு தடுமாறி நான் பார்த்ததில்லை" என்று கூறினார்.

மெகா ஏலம் மற்றும் இந்த சீசனில் சென்னை அணியின் செயல்பாடு குறித்த உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடவும்.

BCCI ஒப்பந்தம்: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு; பட்டியலில் நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

2025–26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ வெளியிடும். அந்தவகையில் 2... மேலும் பார்க்க

IPL: ஸ்பான்ஸ்ர்ஷிப் டு டெலிகாஸ்ட்... அணிகள் வருமானம் ஈட்டுவது எப்படி? - ஐ.பி.எஸ் பிசினஸ் தெரியுமா?

இன்றைக்கு கிரிக்கெட் உலகே பிசிசிஐயின் கையில்தான் இருக்கிறது எனலாம். பிசிசிஐ இத்தனை அதிகாரமிக்க கிரிக்கெட் போர்டாக மாறியதற்கு ஐ.பி.எல்லுமே ஒரு முக்கியக் காரணம்தான். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்கி... மேலும் பார்க்க

IPL 2025 : 'அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை, அவர்...' - ரோஹித் பற்றி ஹர்திக் சொன்னது என்ன?

நேற்றையப் (ஏப்ரல் 21) போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற... மேலும் பார்க்க

IPL 2025: ``எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருது கொடுத்தீங்க..'' - விராட் கோலி ஓப்பன் டாக்

நேற்றையப் (ஏப்ரல் 20) போட்டியில் பஞ்சாப் அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றிருக்கிறது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓ... மேலும் பார்க்க

Rishabh Pant: ``பண்ட்டின் கேப்டன்சி highly underrated'' - கடைசி ஓவர் பிளானை விளக்கும் கைஃப்

ராஜஸ்தான் அணிக்கெதிராக லக்னோ அணி நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) விளையாடிய போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மொத்தமாக 180 ரன... மேலும் பார்க்க

Rohit Sharma : 'சின்ன வயசுல க்ரவுண்டுக்குள்ளேயே விட மாட்டாங்க; ஆனா, இப்போ' - ரோஹித் நெகிழ்ச்சி

'மும்பை வெற்றி!'வான்கடேவில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டியை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அதிரடியாக ஆடி 76 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். விருத... மேலும் பார்க்க