செய்திகள் :

Dhoni : 'ரிட்டையர் ஆகப்போறேன்னு நினைக்கிறாங்க, ஆனா...' - ஓய்வு பற்றி தோனி

post image

சென்னை வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி ஈடன் கார்டனில் நடந்திருந்தது. சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார். குறிப்பாக, அவரின் ஓய்வை பற்றிய ஒரு மெசேஜையும் ரசிகர்களுக்காக சொல்லியிருக்கிறார்.

தோனி - ரஹானே
தோனி - ரஹானே

'போட்டியை பற்றி தோனி!'

தோனி பேசுகையில், 'வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே. இந்தப் போட்டியில் முக்கியமான சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த மாதிரியான சமயத்தில் ரொம்பவே யதார்த்தமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். எந்தெந்த விஷயங்கள் நமக்கு சாதகமாக செல்லவில்லை என்பதை உணர வேண்டும்.

எங்களிடம் 25 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து அடுத்த ஆண்டுக்கான தீர்வை தேட வேண்டும். எந்த பேட்டர்கள் எந்த ஸ்லாட்டில் செட் ஆவார்கள் என்பதை கண்டடைய வேண்டும். சூழலுக்கு ஏற்ப வீசும் பௌலர்களை கண்டடைய வேண்டும்.

CSK
CSK

நடப்பு சீசனில் நிறைய பேட்டர்கள் பெர்ஃபார்ம் செய்யவில்லை. சில சமயங்களில் விஷயங்கள் நமக்கு சாதகமாக அமையாது. நீங்கள் அவுட் ஆவீர்கள். ஆனாலும், உங்களை நீங்கள் நம்பி நிறைவோடு ஷாட்களை ஆட வேண்டும். அப்படியான வீரர்கள்தான் இப்போதைய அணியில் இருக்கிறார்கள்.

துபேவுடன் ஆடும்போது அவர்களின் ஸ்பின்னர்களை ஆட்டத்துக்குள் வர வைத்துவிடாதே. நான் தான் கடைசி பேட்டர், அதனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக விக்கெட்டுகளை இழக்ககூடாது என்றேன். டெவால்ட் ப்ரெவிஸூக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் எங்களுக்கு ஆட்டத்தில் சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். துபேவும் கால்குலேட்டடாக ஷாட்களை ஆடினார்.' என்றார்.

'ஓய்வு பற்றிய மெசேஜ்!'

மேற்கொண்டு தன்னுடைய ஓய்வைப் பற்றியும் தோனி பேசினார். அவர் கூறியதாவது, 'எனக்கு எல்லா சமயங்களிலும் ரசிகர்களின் இந்த அன்பும் ஆதரவும் கிடைக்கிறது. எனக்கு 43 வயதாகிறது. நிறைய கிரிக்கெட் ஆடிவிட்டேன். எது என்னுடைய கடைசி சீசன் என ரசிகர்களுக்கு தெரியாது. அதனால்தான் அவர்கள் இந்தளவில் வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

Dhoni
Dhoni

நான் ஆண்டில் 2 மாதங்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடுகிறேன். இந்த ஐ.பி.எல் முடிந்தவுடன் 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதன்பிறகு என்னுடைய உடல் எவ்வளவு பிரஷரை தாங்குகிறது என்பதை அறிய வேண்டும். ஓய்வை பற்றி இப்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனாலும் ரசிகர்கள் அன்பும் ஆதரவும் அற்புதமானதாக இருக்கிறது.' என்றார்.

Virat Kohli : 'அவமதிப்பு... அதிருப்தி... ஃபார்ம்!' - கோலி ஏன் ஓய்வு பெற நினைக்கிறார்?

'ஓய்வு பெறும் கோலி?டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறவிருப்பதாக ஒரு செய்தி தீயாக பரவிக்கொண்டிருக்கிறது. கோலி தரப்பிலிருந்தும் பிசிசிஐ தரப்பிலிருந்தும் எந்த மறுப்பும் வெளியாகவில்லை.விராட் க... மேலும் பார்க்க

Virat Kohli : 'என் ஓய்வை ஏற்றுக்கொள்ளுங்கள்!' - பிசிசிஐக்கு விராட் கோலி கடிதம்?

'ஓய்வு பெறும் கோலி?'டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாகவும் அதை பிசிசிஐயிடம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.Virat Kohliஇந்திய அணி... மேலும் பார்க்க

Rohit Sharma : 'விடைபெறுகிறேன்; அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி!' - ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா!

'திடீர் ஓய்வு!'டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென அறிவித்திருக்கிறார்.ரோஹித் சர்மா - AUS v IND'ரோஹித்தின் பதிவு!' இதுசம்பந்தமாக ரோஹித் வெளியிட்டிருக்கு... மேலும் பார்க்க

Playoffs : 'ஒரே இரு இடம்; மோதிக்கொள்ளும் 4 அணிகள்!' - ப்ளே ஆப்ஸூக்கு செல்லப்போகும் அணிகள் எவை?

நடப்பு ஐ.பி.எல் தொடரில் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மூன்று அணிகள் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை முழுமையாக இழந்து 'E' மார்க் வாங்கி எலிமினேட் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் எந்த அணியும் அந்த 'Q'... மேலும் பார்க்க

IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் யார் தெரியுமா?

'சொதப்பிய வீரர்கள்!'ப்ளே ஆஃப்’ஸ் ரேஸ் வேகமெடுத்திருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்க... மேலும் பார்க்க

Urvil Patel : 'அதிரடி பேட்டர்; அசத்தல் கீப்பர்!'- சிஎஸ்கேவின் புதிய வீரர்; யார் இந்த உர்வில் படேல்?

'தேடுதல் வேட்டையில் சிஎஸ்கே!'நடப்பு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி முதல் அணியாக ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது. ஆனாலும், சீசனுக்கு இடையே பல இளம் வீரர்களையும் ட்ரையல்ஸூக்கு அழைத்து அணியில் சேர... மேலும் பார்க்க