செய்திகள் :

Dhoni - Kohli: "தோனியா..? கோலியா..?" - வைரலாகும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதில்!

post image

தோனி, கோலி இருவருமே இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றனர். ஒருபக்கம், ஐ.சி.சி-யின் மூன்று கோப்பைகளை வென்றுகொடுத்த ஒரே கேப்டன் தோனியென்றால், மறுபக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை புதிய பரிமாணத்துக்குக் கொண்டு சென்ற கேப்டன் கோலி.

கோலி - தோனி

அணியின் வெற்றியே இலக்கு என்றாலும், ஆட்ட அணுகுமுறையில் நிதானம், ஆக்ரோஷம் என இருவரும் ஒருவருக்கொருவர் நேரெதிர். இதனாலேயே, இருவரின் தலைமைப் பண்புகளும் கிரிக்கெட்டை தாண்டி பல தளங்களில் முன்னுதாரணமாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தோனி, கோலி இருவரில் யாரைப் பிடிக்கும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆந்திர ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வும், முன்னணி தெலுங்கு நடிகருமான நந்தமூரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் 'Unstoppable with NBK' நிகழ்ச்சியின் நான்காவது சீசனின் முதல் எபிசோடில் சிறப்பு விருந்தினராக சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவிடம், "நீங்கள் தோனியைப் போன்ற தலைவர். நான் விராட் கோலி போன்ற பிளேயர்" என்று பாலகிருஷ்ணா கூறினார். அதற்கு உடனடியாக, "நான் எப்போதும் விராட் கோலியையே விரும்புவேன்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இருவரின் இந்த உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Sanju Samson: ``ரோஹித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்...'' - சஞ்சு சாம்சன் கூறியதென்ன?

17 வருடங்கள் கழித்து ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது.இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தா... மேலும் பார்க்க

MS Dhoni: `தோனி பெயர் வந்தாலே ஸ்கிப் பண்ணிருவோம்' - சஞ்சு சாம்சன் பகிர்ந்த சுவாரஸ்யம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடைசியாக சர்வதேச கிரிக்கெட் ஆடி ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், சர்வத... மேலும் பார்க்க

Gambhir - Rohit: கம்பீர் - ரோஹித் காம்போவில் இந்திய அணி அடுத்தடுத்து `அப்செட்’... மீளும் வழி என்ன?!

ஒரு சாம்பியன் அணியும், முன்னாள் சாம்பியனும் இணையும்போது அந்த அணி அடுத்தடுத்து புதிய உச்சங்களை நோக்கி முன்னேறும் என்றுதான் எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், இந்திய அணிக்கோ அதற்கு நேரெதிராக நடந்துகொண்ட... மேலும் பார்க்க

IND Vs NZ : ரச்சினின் வெற்றிக்கு உதவிய 'சென்னை' பயிற்சி - ஆட்டநாயகனான CSK வீரர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 6 டக் அவுட்டுடன் 46 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அ... மேலும் பார்க்க

IND Vs NZ : 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.... மேலும் பார்க்க

Dhoni : வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? - சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் கொடுத்த அப்டேட்!

வருகிற ஐபிஎல் சீசனில் சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவாரா? என்பது பற்றி அதன் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசியிருக்கிறார்.2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிற... மேலும் பார்க்க