திருமாவளவன் எங்கு செல்வாா் என்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது: அதிமுக
Diamond: 7.44 காரட் வைரத்தை தோண்டி எடுத்த விவசாயி... தொடர்ந்து தேடல்; அடித்தது ஜாக்பாட்!
மத்திய பிரதேசத்தில் உள்ள சுரங்கத்திலிருந்து விவசாயி ஒருவர் 7.44 காரட் வைரத்தைக் கண்டுபிடித்து எடுத்துள்ளார். இதுவரை விவசாயியாக இருந்து வந்த திலீப் மிஸ்ட்ரி, இதன் மூலம் ஒரே நாளில் பணக்காரராக மாறி இருக்கிறார்.
மத்திய பிரதேசம் பன்னா மாவட்டத்தில் உள்ள வைர சுரங்கம் மிகவும் பிரபலமானது. பன்னாவில், எந்த ஒரு இந்திய குடிமகனும் அரசு வைர அலுவலகத்தில் ரூ.200க்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து வைர சுரங்கத்தை அமைக்கலாம்.
வைரத்தை கண்டுபிடித்த பின் பன்னா வைர அலுவலகத்திற்கு அதைக் கொண்டு செல்ல வேண்டும். அங்கு ஒரு அதிகாரி வைரத்தை ஆராய்ந்து அதன் மதிப்பை மதிப்பிடுவார். 1% TDS பிடித்தம் செய்யப்பட்டு மீதி பணம் வைரம் கொண்டு வந்தவருக்கு வழங்கப்படும்.
தற்போது வரை இந்த வைர அலுவலகத்திற்கு 228 காரட்கள் கொண்ட 79 வைரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3.53 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திலீப் மிஸ்ட்ரி இதற்கு முன்பு ஆகஸ்ட் மாதம் 16.10 காரட் வைரத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வைர அலுவலகத்தின் அதிகாரி அனுபம் சிங், இரண்டு வைரங்களும் ஒன்றாக ஏலத்தில் விடப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.
"கொரோனா காலத்தின் போது, நானும் எமது கூட்டாளிகளும் தீவிர வைர தேடலில் ஈடுபட்டு வந்திருந்தோம். அதன் மூலம் கிடைத்த அனுபவமும் மகிழ்ச்சியும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து வைர சுரங்க விரிவாக்கத்திற்கும், எமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவேன்" என்றார்.