செய்திகள் :

Disclosure of Assets: `769 நீதிபதிகளில் 95 பேரே...'- சொத்து விவர வெளியீடு விவகாரத்தில் நடப்பதென்ன?

post image

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்குப் பிறகு அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து நீதித்துறையின் நேர்மை குறித்து பலத்த கேள்விகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது.

குறிப்பாக நீதிபதிகளின் சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதும் என்பது தொடர்கதையாகவே நீதித்துறையில் இருக்கிறது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி...

எனவே, கடந்த ஒன்றாம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பகிரங்கமாக அறிவிக்க ஒப்புக் கொண்டனர்.

நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியாகியிருக்கிறது.

769 நீதிபதிகளில் வெறும் 95 நீதிபதிகள் மட்டுமே...

இதில், 769 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், 95 பேர் (12.35%) மட்டுமே தங்கள் சொத்துகள் குறித்த தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் 44 பேரில் 41 பேரும், இமாச்சலப் பிரதேசத்தின் 12 நீதிபதிகளில் 11 பேரும் தங்கள் சொத்துகளின் விவரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் 38 நீதிபதிகளில் 7 பேர் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதேபோல சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் ஒருவரும், தமிழ்நாட்டின் 65 நீதிபதிகளில் 5 பேரும் தங்கள் சொத்துகளின் விவரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடாமல் இருப்பது அந்தந்த மாநிலத்தின் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை, பொது பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

ஏப்ரல் 2025 நிலவரப்படி, 33 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 30 பேர் தங்கள் சொத்துக்களின் விவரங்களை அறிவித்துள்ளனர். விரைவில் மற்ற நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என உறுதி செய்கிறது உச்ச நீதிமன்றம்.

`சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்!' - வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பத... மேலும் பார்க்க

அன்னை இல்லம்: `எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்க’ - ராம்குமாருக்கு உத்தரவு

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்ப... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீதிபதி அதிரடி உத்தரவு

அதிமுக ஆட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே அதிர வைத்தது. அதிமுக புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்போதுவரை இந்த வழக்கு அரசியல் ரீதியாக விவாத பொருளாக... மேலும் பார்க்க

தங்களின் சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்! - முழு விவரம்

நீதிபதிகளின் செயல்பாடுகளின் வெளிப்படை தன்மை குறித்து எப்பொழுதும் கேள்வி எழுப்பப்பட்ட வந்திருக்கிறது. குறிப்பாக அவர்களது சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து வ... மேலும் பார்க்க

வீடு ஜப்தி வழக்கு : `சகோதரர் ராம்குமார் கடனுக்கு உதவ முடியாது’ - உயர் நீதிமன்றத்தில் பிரபு தரப்பு

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்... மேலும் பார்க்க

Chennai: `வணிக வளாகம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது' -VR மால் வழக்கில் நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருமங்கலத்தில் செயல்படும் வி.ஆர் வணிக வளாகம் இனி பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நபர் அளித்த புகாரின் அ... மேலும் பார்க்க