செய்திகள் :

Diwali : `புது சட்டை, பட்டாசு, கறிக்குழம்பு, பட்டிமன்றம்...' - 90'ஸ் கிட்ஸ் தீபாவளி

post image

ஓப்பன் பண்ணா...

சாயந்திர நேரம்.

ஒரு தெரு... லைனா வீடுங்க.

தெருவுல பசங்க, பொண்ணுங்க ஓடியாடி விளையாடிட்டு, பேசி சிரிக்கற சத்தம் ஹெவியா கேட்டுகிட்டு இருக்கு. அந்த தெருவுல ஒரு வீட்டு முன்னாடி ஒரு அப்பா அவரோட டி.வி.எஸ் 50-ஐ மெதுவா நிறுத்தறாரு. அவரு கைல பெரிய கவரு. அதை பார்த்த உடனே, அவரோட பையன் அவருகிட்ட ஓடி வந்து, அவரு கையில இருக்க கவரை இழுக்கறான். அவரோ அதட்டி அந்த பையனை கூட்டிட்டு, கவரோட வீட்டுக்குள்ள போறாரு.

ஓடியாடி விளையாடிட்டு, பேசி சிரிக்கற சத்தம்...

கொஞ்ச நேரத்துல, அந்த பையன் முகமெல்லாம் பல்லா ஓடி வந்து...

ஏய்...எங்க அப்பா என்னென்ன வெடி வாங்கிட்டு வந்துருக்காரு தெரியுமா...கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், லட்சுமி வெடினு லிஸ்டை அடுக்கிட்டு போக, மத்த பொண்ணு, பசங்க புருவம் 'ஆ....ஊ'னு உயர்ந்துகிட்டே இருக்கும்.

இந்த இடத்துல கொஞ்சம் நிறுத்தி, அந்த பையனை நல்லா உத்து பாருங்க. அந்த பையன் வேற யாரும் இல்ல...நானும், நீங்களும் தான் 90'ஸ் கிட்ஸ்களே!

90'ஸ் கிட்ஸ்களுக்கு மளிகை கடையில ஒரு ரூபாய்க்கு விக்கற கொள்ளு பட்டாசு, பாம்பு மிட்டாய், தீப்பெட்டி வாங்கி, கல்லு வெச்சு கொட்டறது, கொளுத்தறது, உரசி பத்த வெக்கறதுனு ஒரு மாசத்துக்கு முன்னாடியே அமர்களமா தீபாவளி தொடங்கிரும். அப்புறம், தீபாவளி நெருங்க நெருங்க அப்பா வாங்கிட்டு வந்த பட்டாசுகளை அம்மா கொஞ்சம் கொஞ்சமா எடுத்து தர, அதை ஃபிரண்ட்ஸ்கிட்ட காட்டி வெடிக்கும்போது பெருமை அப்படி அள்ளும்.

ஒரு ரூபாய்க்கு விக்கற கொள்ளு பட்டாசு, பாம்பு மிட்டாய், தீப்பெட்டி...

தீபாவளி மாசம் மட்டும் காலண்டர் நமக்கு தேவையே படாது. காரணம், ஒண்ணு ரெண்டு பட்டாசு சத்தம் கேட்டா, தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்குனு அர்த்தம். இன்னும் கொஞ்சம் அதிக சத்தம் கேட்டா ரெண்டு வாரம் இருக்கு...சரவெடி சத்தம் தூள் கிளப்புச்சுனா, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. விடாம சத்தம் கேட்டா, அது தீபாவளி வாரம்.

தீபாவளின்னா பட்டாசு மட்டுமல்ல...'அதுக்கும் மேல'.

தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அம்மா பரபரப்பா ஆகிடுவாங்க. லட்டு பிடிக்கறது, மொறு மொறு முறுக்கு சுடுறதுனு நம்ம வீடே ஒரே 'கம கம' வாசம் தான்.

'நாங்க மட்டும் சும்மாவா'னு அப்பாங்களும் சில ஸ்பெஷல் ஐட்டம் வெச்சிருப்பாங்க. அதை அவங்க தீபாவளி சமயத்துல மட்டும் செய்வாங்க. டேஸ்ட் அப்படி இருக்கும்.

நம்ம அக்கா, தங்கச்சிங்க...டிரஸ்க்கு மேட்சா வளையல் வாங்கறது, ஜிமிக்கி வாங்கறது, கலர் பொட்டு வாங்கறதுனு பிஸி ஆயிடுவாங்க. வாங்கறதோடு மட்டுமல்ல...அவங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட காட்டறது, மருதாணி போடுறதுனு பலே பிஸி.

நம்ம, நம்ம அண்ணா, தம்பிங்க...பட்டாசு வெடிக்கறது...அதுவும் பட்டாசு பாக்ஸ் வீட்டுல வாங்கி தந்துறாதாங்கனு வெச்சுக்கோங்க...அதை பத்தி அவங்க ஃபிரண்ட்ஸ் கிட்ட பீலா விடறதுனு அவங்க சுத்திகிட்டு இருப்பாங்க...இருப்போம்.

இதெல்லாம் விட, ரொம்ப முக்கியமான கலர் கலர் பெரிய்ய்யய கோலம்!

அட...அட...அட...

தீபாவளிக்கு முன்னாடியே இப்படினா, தீபாவளி அன்னைக்கு கேக்கவா வேணும்???

காலையில எண்ணெய் குளியல், புது டிரஸ்ஸோடு ஒரு ஓரத்துல மஞ்சள்னு தீபாவளி தொடங்கும்.

'இத கொடுக்கமாட்டேன்...அத கொடுக்கமாட்டேன்'னு அம்மா பத்திரபடுத்தி வெச்சுருந்த, அத்தனை பட்டாசுகளும் இப்போ நம்ம கையில இருக்கும். பட்டாசு வெடிச்சு கொஞ்சம் டயர்ட் ஆகி வீட்டுக்குள்ள போகும்போது, கறி குழும்பு வாசம் அத்தனையும் மறக்க வெச்சுரும்.

ஆவி பறக்க பறக்க தட்டுல இட்லி வெச்சு, அதுமேல அப்படியே கறி கொழம்பு ஊத்தி, அதை பிணைஞ்சு வாயில எடுத்து வெச்சா, 'அட...அட...அட'. இதை சாப்பிட்டுகிட்டே, டிவில ஓடிகிட்டு இருக்க பட்டிமன்றத்தை பார்த்தா அது ஒரு 'பிளிஸ் (Bliss)' ஃபீல்.

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு'னு சொல்ற மாதிரி ஒரு குட்டி தூக்கம் போட்டு எந்திரிச்சா...திரும்பவும் சாப்பாடு...பட்டாசு...ரிப்பீட்டு. இதெல்லாம் சிறப்பா முடிஞ்சு, டிவில ஆறு மணிக்கு போடுற புது படத்தோடு முடியும் 90'ஸ் கிட்ஸ் தீபாவளி ராத்திரி.

இதை சும்மா அசைப்போடும்போதே, ஃபிரஷ் ஃபீலா இருக்குல்லா...ஆனா, இப்போ எல்லாம் தீபாவளி வர்றதும் தெரியறது இல்ல...போறதும் தெரியறது இல்ல. தீபாவளி அன்னைக்கு ஒண்ணு, ரெண்டு சத்தம் கேக்கறதே பெருசா இருக்கு. அப்போ எல்லாம் பெரியவங்கள்ல இருந்து சின்னவங்க வரைக்கும் எல்லாரும் பட்டாசு வெடிப்பாங்க. ஆனா, இப்போ அந்த சீனே பாக்க முடியறது இல்ல.

எது எப்படியோ...நம்ம தீபாவளிய ஜாலியா அசைப்போட்டு, அதை மீண்டும் ரீகிரியேட் பண்ண முயற்சிப்போம் 90'ஸ் கிட்ஸ்களே...

ஹேப்பி தீபாவளி மக்களே!

நீங்க, இங்க லிஸ்ட்-அவுட் பண்ண விஷயங்கள்ல, எதையெல்லாம் இன்னைக்கு செஞ்சீங்கன்னு கமென்ட்ல சொல்லுங்க..!

மாற்றுத்திறனாளி மகள் அனுபவித்த வலி; தந்தையின் யோசனை... இது Morgan’s Wonderland-ன் கதை!

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தீம் பார்க் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. ஆனால், உலகிலேயே முதன் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தீம் பார்க்கான “மோர்கன் வொண்டர்லேண்ட்” (Morgan’s Wonderland) ... மேலும் பார்க்க

Kerala: வீடு ஜப்தி... குழந்தையுடன் தவித்த பெண்ணுக்கு உதவிய லூலூ மால் தலைவர்!

வீட்டுக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்த பெண்ணுக்கு, லூலு மால் தலைவர் யூசுப் அலிப் கடனை அடைத்து உதவி செய்துள்ளார். 2019-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த தம்பதி, கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க