செய்திகள் :

DMK: "துரோகத்தைத் தவிர உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது?" - எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

post image

சென்னையில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளதாவது...

"2026-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அது தான் நமது இலக்கு. மேலும், அந்த சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். தற்போதே அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.

கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி வாக்கு சதவிகித கணக்கு ஒன்றைக் கூறி வருகிறார். அது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சும் கணக்காக உள்ளது. அந்தக் கணக்கை அ.தி.மு.க தொண்டர்களுக்குக் கூட்டல், வகுத்தல் கணக்கு தெரியாது என்று நம்பி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அந்தக் கணக்கை அடிப்படை அறிவு உள்ள எந்த அ.தி.மு.க-வினரும் நம்பமாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

கோழைச்சாமியாக இருக்கும் பழனிச்சாமி பா.ஜ.க-வின் டங்ஸ்டன் சுரங்க அனுமதியைக் கண்டித்திருக்கிறாரா? அம்பேத்கரை அவதூறாகப் பேசிய ஒன்றிய அமித்ஷாவுக்கு ஏன் கீச்சுக்குரலில் கூட எதிர்க்கவில்லை? எடப்பாடி பழனிசாமிக்குப் பிரதமரை எதிர்த்துப் பேசும் துணிச்சல் உண்டா?

தி.மு.க என்றால் கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான். ஆனால், உங்களின் (அ.தி.மு.க) அரசியலுக்கு என்ன அடிப்படை? நீங்கள் துரோகத்தைத் தவிர பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்கு என்ன இருக்கிறது?

வரலாற்றுக் காலத்தில் எப்படி சோழரின் ஆட்சியைப் பொற்காலம் என்று கூறினார்களோ, அப்படி இப்போது மக்கள் ஆட்சியில் தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சி என்று கூறவேண்டும். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தவர்கள் என்று கருப்பு - சிவப்புக்காரர்களைச் சொல்ல வேண்டும். வெல்வோம் இருநூறு... படைப்போம் வரலாறு!" என்று பேசினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

`செந்தில் பாலாஜியைப் பார்த்து பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா?' - சீமான் காட்டம்

திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் , ‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ப... மேலும் பார்க்க

தேர்தல் நடத்தை விதி திருத்தம்: ``ஜனநாயகத்தின் மீதான மற்றொரு தாக்குதல்" - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்!

Qவாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும்போது ஏற்படும் சிக்கல்களை, சந்தேகங்களை நிவர்த்திச் செய்ய வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் இருக்கும் சிசிவிடி, வெப் கேமரா போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் பெற்று ... மேலும் பார்க்க

"பா.ஜ.க ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது" - சொல்கிறர் ரகுபதி

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் வார்டு எண் 38, 39, 40, 41, 42 ஆகிய பகுதிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 25.31 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேரமும் ... மேலும் பார்க்க

DMK: 'பேரிடர் நிதி என்பது பாஜகவின் கட்சி நிதி அல்ல' - செயற்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள் என்னென்ன?

சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (டிசம்பர் 22) தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள்..."கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரில் அம்பேத்கர் க... மேலும் பார்க்க

Udhayanidhi: "200 இடங்கள் அல்ல... 200-க்கும் மேல் திமுக வெல்லும்" - உதயநிதி உறுதி

இன்று (டிசம்பர் 22) சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பதாவது..."இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் எந்தத் தேர்தலிலும் தோ... மேலும் பார்க்க

புதுவை: "மார்ட்டின் குழுமத்துக்கு அரசியல் அடித்தளம்" - ஜான்குமார் மீதான திமுக புகாரும், பாஜக பதிலும்

சமீபத்தில் வீசிய ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதையடுத்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவ... மேலும் பார்க்க