செய்திகள் :

DMK: 'திமுக-வுக்கு மீண்டும் தலைவலி ஆகிறதா மகளிர் உரிமைத் தொகை?' - தொடரும் குழப்பங்களும் கேள்விகளும்!

post image

சமீபத்தில் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் இன்னும் சில பேருக்குக் கிடைக்கவில்லை என்ற நிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு வருகிற ஜனவரி முதல், குடும்ப அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதுபோல முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து தபால் கிடைக்கப் பெற்றவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆகவே விரைவில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வேறு என்ன குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து தருவதற்கும் நான் தயாராக உள்ளேன்" என்றார்.

இது குடும்பத் தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. மறுபக்கம் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கின.

உரிமைத் தொகை

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்' என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பின்னாளில் சாத்தியமற்ற தகுதிகளை நிர்ணயித்து, அதைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1 கோடியே 20 லட்சத்திற்கும் குறைவான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும்தான் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில்தான் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கு எதிராக மக்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவுகிறது. அதனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதால்தான் இப்படியொரு அறிவிப்பை தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது தி.மு.க-வின் தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான்.

உதயசூரியன்

2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க, அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் 1.16 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியது. அதன் பின்னர், தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அனைவருக்கும் வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தி.மு.க அரசின் உண்மை நோக்கத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இதைக் கண்டு ஏமாற மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க வீழ்த்தப்படுவது உறுதி" எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு இந்த விவகாரம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.

இதையடுத்து தனது எகஸ் பக்கத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்குத் தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும். முதல்வரின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" எனத் தெரிவித்தார்.

துரை கருணா

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, "முதலில் அனைவருக்கும் உரிமைத் தொகை தருவதாகத் தெரிவித்தார்கள். பிறகுப் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார்கள். விண்ணப்பித்த பாதிப் பேருக்குத்தான் தொகை கிடைத்தது. அதிலும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. சில இடங்களில் கூலி வேலை செய்வோருக்குத் தொகை கிடைக்கவில்லை. எதிர்வீட்டில் பொருளாதாரம் அதிகம் இருந்தும் அவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கிறது என்கிற குமுறல் இருக்கிறது. எனவே இதை முழுமையாக அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருக்கிறது.

இந்த சூழலில்தான் அனைவருக்கும் உரிமைத் தொகை என அமைச்சர் தெரிவித்தார். பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும்தான் என்றார். இதன் மூலமாக ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதில் குழப்பம் இருக்கிறது. அதேநேரத்தில் சில நேரத்தில் தி.மு.க-வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாங்கி கொடுக்கிறார்கள் என்கிற பேச்சும் இருக்கிறது. எனவே இதில் வெளிப்படைத் தன்மை வேண்டும்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், "ஏற்கெனவே விண்ணப்பித்த அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுக்கவில்லை. மீதம் இருப்பவர்களுக்கும் கொடுப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அனைவருக்கும் கொடுப்போம் என்றுதான் தேர்தல் நேரத்தில் தெரிவித்தார்கள். பிறகு அதைச் செய்யவில்லை. இந்த சூழலில்தான் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். பிறகுத் தகுதியுள்ளவர்கள் என்கிறார். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அரசிடம் நிதி இல்லாததால் அனைவருக்கும் கொடுப்பது சிரமம்.

ப்ரியன்

தேர்தலுக்காகச் செய்வதாக இருந்தால் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் செய்ய மாட்டார்கள். 2026ஆம் ஆண்டு ஜனவரியில் வேண்டுமானால் கொடுக்கலாம். எனவே 2026 என்பதைத்தான் 2025 என மாற்றிச் சொல்லிவிட்டாரா அமைச்சர் எனத் தெரியவில்லை. எப்படியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு சம்மந்தப்பட்ட திட்டத்தில் பயன்பெறுவோரும் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்வார்கள். சில மாநிலங்களில் ரூ. 3,000 கொடுக்கிறார்கள். எனவே தமிழகத்தில் ரூ. 1,500 வழங்குவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

The Guardian: 'இனி எக்ஸ் தளத்தில் செய்திகளைப் பகிர மாட்டோம்'; கார்டியனின் அறிவிப்புக்குக் காரணமென்ன?

1821ஆம் ஆண்டு லண்டனில் 'மான்செஸ்டர் கார்டியன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், பின்னர் 1959ஆம் ஆண்டு 'தி கார்டியன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வெளிவந்துகொண்டிருக்கிறது.203 ஆண்டுகள் பழமைவ... மேலும் பார்க்க

மதுரை: தொடரும் முல்லை நகர் மக்களின் போராட்டம்; தலைமைச் செயலாளருக்கு சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்

மதுரை பீபிகுளம் முல்லை நகரில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராகி வரும் நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து போரா... மேலும் பார்க்க

கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் சீனியர் புள்ளி!காய்ச்சி எடுத்த தலைமை...சமீபத்தில் தென்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதன்மையானவர், நிர்வாகிகள் மட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்... மேலும் பார்க்க

Martin : லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை மற்றும் கோவையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை துடியலூர் வெள்ளை ... மேலும் பார்க்க

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவ... மேலும் பார்க்க