செய்திகள் :

The Guardian: 'இனி எக்ஸ் தளத்தில் செய்திகளைப் பகிர மாட்டோம்'; கார்டியனின் அறிவிப்புக்குக் காரணமென்ன?

post image

1821ஆம் ஆண்டு லண்டனில் 'மான்செஸ்டர் கார்டியன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், பின்னர் 1959ஆம் ஆண்டு 'தி கார்டியன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வெளிவந்துகொண்டிருக்கிறது.

203 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தநாளிதழ், 'ஏன் இனி எக்ஸ் தளத்தில் 'தி கார்டியன்' பதிவிடாது' எனத் தலைப்பிட்டுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இருந்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிடுவதை நிறுத்துகிறோம். ஆனால், எக்ஸ் பயனர்கள் எங்கள் கட்டுரைகளைப் பகிரலாம் எனத் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப்புக்காக பிரசாரம் செய்த மஸ்க்

இதற்குக் காரணமாக 'தி கார்டியன்' நாளிதழ் தெரிவித்திருப்பதாவது, "தீவிர வலதுசாரி சதி கோட்பாடுகள், இனவெறி உட்படப் பல மோசமான கருத்துகள் எக்ஸ் தளத்தில் பரப்பப்பட்டு வருவதாக நாங்கள் நினைத்ததை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் அடிக்கோடிட்டுக் காட்ட உதவியுள்ளது. எக்ஸ் என்பது ஒரு நச்சு ஊடகம். அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது அரசியல் உரையாடலைக் கட்டமைக்க முடிந்தது" எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அமெரிக்கத் தேர்தலின்போது எக்ஸ் தளத்தின் சிஇஒ எலான் மஸ்க் தொடர்ந்து நச்சு கருத்துகளைப் பரப்பி வந்ததால், இனி எக்ஸ் தளத்தில் எந்த செய்தியையும் பதிவிடப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறது.

எக்ஸ் பயனர்கள் இனி எங்கள் கட்டுரைகளை பகிர்ந்துகொள்ள முடியும் எனவும் ,செய்தி சேகரிப்பதற்காக எக்ஸ் தளத்தை எங்கள் செய்தியாளர்கள் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், "சமூக ஊடகங்கள் செய்தி நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய கருவியாக, புதிய வாசகர்களை ஈர்ப்பதற்கு உதவலாம். ஆனால், எக்ஸ் தளம் எங்கள் பணியை ஊக்குவிப்பதில் குறைவான பங்கே வகிக்கிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும் theguardian.com என்ற இணையதளத்தில் தங்களின் இதழ்களை வாசகர்கள் படிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தி கார்டியன்

ஃபேஸ்புக்கிற்கு பிறகு மிகவும் பிரபலமான சமூக ஊடகமாக இருந்த டுவிட்டரை, உலக பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் என்பதை எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்ததில் இருந்து பல மாற்றங்களை எலான் மஸ்க் செய்தார்.

இவரின் செயல்பாடுகளால் குழப்பங்களும், எதிர்மறையான கருத்துகளும் பயனர்களிடம் இருந்து வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் தளத்தில் 'தி கார்டியன்' கணக்கை 10.8 மில்லியன் நபர்கள் பின் தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

DMK: 'திமுக-வுக்கு மீண்டும் தலைவலி ஆகிறதா மகளிர் உரிமைத் தொகை?' - தொடரும் குழப்பங்களும் கேள்விகளும்!

சமீபத்தில் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய... மேலும் பார்க்க

மதுரை: தொடரும் முல்லை நகர் மக்களின் போராட்டம்; தலைமைச் செயலாளருக்கு சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்

மதுரை பீபிகுளம் முல்லை நகரில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராகி வரும் நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து போரா... மேலும் பார்க்க

கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் சீனியர் புள்ளி!காய்ச்சி எடுத்த தலைமை...சமீபத்தில் தென்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதன்மையானவர், நிர்வாகிகள் மட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்... மேலும் பார்க்க

Martin : லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை மற்றும் கோவையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை துடியலூர் வெள்ளை ... மேலும் பார்க்க

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவ... மேலும் பார்க்க