செய்திகள் :

மதுரை: தொடரும் முல்லை நகர் மக்களின் போராட்டம்; தலைமைச் செயலாளருக்கு சு.வெங்கடேசன் அவசரக் கடிதம்

post image

மதுரை பீபிகுளம் முல்லை நகரில் நீண்டகாலமாக வசித்துவரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி வீடுகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் தயாராகி வரும் நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து போராட்டம் நடத்தி வரும் முல்லை நகர் மக்களுக்குப் பல்வேறு கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

முல்லை நகர் மக்கள்

மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இப்பிரச்சினை குறித்து  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பீ.பீ.குளம் அருகில் உள்ள முல்லை நகர் பகுதியில் சுமார் 592 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் முன்னாள் ராணுவத்தினரும் அடங்குவர். அவர்களில் 160-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் அளித்த அங்கீகரிக்கப்பட்ட வீட்டடி மனைகளைப் பணம் செலுத்திப் பெற்று, அதில் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர்.

இப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பீ.பீ.குளம் கண்மாய் இருந்தாலும், தற்பொழுது 3 ஏக்கர் பரப்பளவிற்குத்தான் கண்மாய் இருக்கிறது. அந்த 3 ஏக்கர் கண்மாய்க்கு மூன்று வாய்க்கால்கள் வழியாக  நீர் வந்திருந்தாலும், கடந்த 25 ஆண்டுகளாக நீர்வரத்தின்றி இருந்த வாய்க்கால்கள் முழுமையாக மூடப்பட்டு அதில் கட்டடங்கள், குடியிருப்புகள், கோயில்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக இந்த கண்மாயை முறையாகத் தூர்வார, பராமரிக்க மாவட்ட நிர்வாகம் தவறியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகச் சமீபத்தில் மதுரையில் பெய்த மழையால் இந்த கண்மாய்ப்பகுதி பிரச்னைக்குரியதாக மாறியிருக்கிறது.

இப்பகுதி தொடர்பான வழக்கு ஒன்றில் 14.08.2023 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த பகுதியிலுள்ள மக்கள் காலி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளது. இதை எதிர்த்து முல்லை நகர் குடியிருப்போர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தனி நபர்கள் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற 15.11.2024 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சு.வெங்கடேசன்

இந்நிலையில் கடந்த 11.11.2024 அன்று அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளையும் காலி செய்ய வேண்டுமென்ற அறிவிப்பினை மதுரை மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் ஒட்டியுள்ளது. அன்று மாலையிலிருந்து அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு இப்பிரச்னையைக் கொண்டு செல்லும் நோக்கில், அவர்களது தெருக்களிலேயே கூடி ஒன்றாகச் சமைத்து “தொடர் உள்ளிருப்பு போராட்டம்” நடத்தி வருகின்றனர். இதனை அறிந்து மதுரையில் உள்ள கட்சிகள், இயக்கங்கள் ஒவ்வொன்றாக முன்வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் எனது கவனத்திற்கும் இதனைக் கொண்டு வந்த நிலையில், கீழ்க்காணும் கோரிக்கையைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு இப்பிரச்னையைக் கொண்டு சென்று, மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கக்கூடிய இவ்வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர் மூலமாக, “இந்த பிரச்னையில் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது” என்பதனைத் தெரிவித்து, வீடுகளைக் காலி செய்யும் உயர் நீதிமன்ற உத்தரவை ஒத்தி வைத்திடத் தேவையான சட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

முல்லை நகர் மக்கள்

2. பீ.பீ.குளம் கண்மாய் அமைந்துள்ள மதுரை வடக்கு தாலுகா சர்வே எண் 23-ல் தற்போது நீர்நிலையாக இருக்கும் பகுதியை மட்டும் பாதுகாத்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கும் பகுதியை “வகை மாற்றம்” (Reclassification) செய்திடும் நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டுகிறேன். இதன் மூலம், 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடிசை மாற்று வாரியத்தின் அங்கீகாரம் பெற்று அப்பகுதியில் வாழ்கிற எளிய மக்களின் கோரிக்கையை ஏற்று மீதமிருக்கிற கண்மாய் பகுதியும் மூன்று வாய்க்கால்களும் உரிய முறையில் மீட்டெடுத்துப் பாதுகாக்கும் சூழலும் உருவாகும். எளிய மக்களின் இந்தக் கோரிக்கைகளை தாங்கள் பரிசீலனை செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

DMK: 'திமுக-வுக்கு மீண்டும் தலைவலி ஆகிறதா மகளிர் உரிமைத் தொகை?' - தொடரும் குழப்பங்களும் கேள்விகளும்!

சமீபத்தில் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "மகளிருக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய... மேலும் பார்க்க

The Guardian: 'இனி எக்ஸ் தளத்தில் செய்திகளைப் பகிர மாட்டோம்'; கார்டியனின் அறிவிப்புக்குக் காரணமென்ன?

1821ஆம் ஆண்டு லண்டனில் 'மான்செஸ்டர் கார்டியன்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நாளிதழ், பின்னர் 1959ஆம் ஆண்டு 'தி கார்டியன்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது வெளிவந்துகொண்டிருக்கிறது.203 ஆண்டுகள் பழமைவ... மேலும் பார்க்க

கலக்கத்தில் சீனியர் புள்ளி முதல் அதிரடிக்குக் காத்திருக்கும் அதிமுக வரை... கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் சீனியர் புள்ளி!காய்ச்சி எடுத்த தலைமை...சமீபத்தில் தென்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதன்மையானவர், நிர்வாகிகள் மட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்... மேலும் பார்க்க

Martin : லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை மற்றும் கோவையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை துடியலூர் வெள்ளை ... மேலும் பார்க்க

Wayanad: `வாக்களிக்கும் மனநிலையில் வயநாடு மக்கள் இல்லை'- வாக்குப்பதிவு சரிவு குறித்து பாஜக வேட்பாளர்

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கேரள மாநிலத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வயநாடு தொகுதியில் சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைவ... மேலும் பார்க்க