செய்திகள் :

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

post image

Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. 'வயிறு சுருங்கிடுச்சு...' என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா....? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்... வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

அடல்ட் எனப்படும் வளர்ந்த ஒருவரின் இரைப்பையின் கொள்ளளவு 1.5 முதல் 2 லிட்டர் வரை இருக்கும். இது அதிகபட்சமாக 4 லிட்டர் வரை விரிவடைய வாய்ப்பு உண்டு.

ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள்.

நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் 'கிரெலின்' (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன் 100 சதவிகிதம் சுரக்கும். அது சுரந்ததும்  பசி உணர்வு ஏற்படும். நன்றாகச் சாப்பிடுவோம். முன்னரே குறிப்பிட்டபடி, வயிற்றின் கொள்ளளவு போதும் என உணர்த்தியதும், வேறு சில ஹார்மோன்கள் சுரக்கும்.

சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள்.

இன்க்ரெட்டின்ஸ் (Incretins) என்ற இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்போது, கிரெலின் ஹார்மோன் பூஜ்ஜியம் என்ற அளவுக்கு வந்து, சாப்பிட்டது போதும் என உணர்த்தும். சிலருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே  இந்த கிரெலின் ஹார்மோன் மீண்டும் சுரக்கும். அதற்குக் காரணம், உடல் பருமன். கொழுப்பின் சதவிகிதம் அதிகமிருப்பவர்களுக்கும், அதன் காரணமாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களுக்கும் கிரெலின் மீண்டும் சுரந்து, மீண்டும் பசி எடுக்கும்.

இந்த உணர்வைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன. தவிர, உடல் பருமனைக் குறைத்து, உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும். எனவே, இதில் வயிறு 1.5 லிட்டரைவிட குறைவாகச் சுருங்கவோ, 4 லிட்டரைவிட அதிகமாக விரியவோ மாற வாய்ப்பில்லை. அவரவர் உடல் எடை, ரத்தச் சர்க்கரை அளவு, ஹார்மோன்கள் சுரக்கும் அளவு போன்றவற்றைப் பொறுத்து இது மாறும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Tesla: எலான் மஸ்க் – டொனால்ட் டிரம்ப் மோதல்; நண்பனிடம் வாங்கிய டெஸ்லா காரை விற்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற புதிதில், டெஸ்லா கார் விற்பனை குறைந்தது. தனக்கு தேர்தலில் வெற்றி பெற உதவிய நண்பன் எலான் மஸ்கின் தொழிலை மேம்படுத்த 'சிங்கிள் பேமென்டில்' டெஸ்லா காரை வாங்கினார், ட்ரம்... மேலும் பார்க்க

ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசி பேச்சு; `சீனா செல்கிறாரா ட்ரம்ப்?' - அடுத்து என்ன?

பரஸ்பர வரி - இதைப் பிற நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்தார். இதைச் சில நாடுகள் மவுனமாக ஏற்க, சில நாடுகள் அமெரிக்கா உடன் சமாதானத்திற்குச் சென்றது. ஆனால், சீனா மட்டு... மேலும் பார்க்க

Elon Musk:``நண்பராக இருந்து எதிரியாக மாறியவர்'' - எலான் மஸ்க் குறித்து ட்ரம்ப் பேச காரணம் என்ன?

நேற்று முன்தினம் முதல் உலகம் முழுக்க உள்ள ஹாட் டாப்பிக், 'ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு விரிசல்'. இருவரும் சமூக வலைதளத்தில் மாறி மாறி கருத்துகள் மூலம் மோதிக்கொண்டனர். பின்பு, எலான் மஸ்க் புதிய கட்சி தொட... மேலும் பார்க்க

காயத்தால் ரத்தம் வந்தால் வாயால் உறிஞ்சுவது சரியா.. என்ன செய்ய வேண்டும்? - விளக்கும் மருத்துவர்

சிறுவயதில் காயம் ஏற்பட்டால் கசியும் ரத்தத்ததை உடனே வாயில் வைப்போம். வளர்ந்த பிறகும்கூட பலருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. இது சரியா; இதனால் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறார், ச... மேலும் பார்க்க

``இந்த 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாது..'' - ட்ரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அப்படி நேற்று, உலகில் உள்ள குறிப்பிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவ... மேலும் பார்க்க