செய்திகள் :

Doctor Vikatan: அதிகாலை முதுகுவலி, தூங்கி எழுந்த பிறகும் நீடிக்கிறது - தீர்வு என்ன?

post image

Doctor Vikatan: நான் 35 வயது ஆண். எனக்கு தினமும் அதிகாலை 4 மணிக்கு முதுகுவலி வருகிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்வரையும் சில நேரங்களில் தூங்கி எழுந்திருந்த பிறகும் வலி தொடர்கிறது. தூக்கம் கெட்டுப்போனால் வலி இன்னும் அதிகரிக்கிறது. எனக்கு சுகர், பிபி போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வலியிலிருந்து மீள எனக்கு ஆலோசனை சொல்வீர்களா?

-Krishnan Mani, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

வலிகளில் பல வகை உண்டு. இன்ஃபெக்‌ஷனால் (Infection), அதாவது, கிருமித்தொற்றால் ஏற்படும் வலி, அடிபடுவதால் ஏற்படும் வலி, இன்ஃபளமேஷன் (Inflammation)  எனப்படும் அழற்சி காரணமாக ஏற்படும் வலி என மூன்றாகப் பிரிக்கலாம்.

அடிபடுவதால் ஏற்படும் வலி, ஓய்வெடுக்கும் போது சரியாகிவிடும். அசைவுகளின் போது வலி இருக்கும். இன்ஃபெக்‌ஷனால் வரும் வலியில், அசைவுகளின் போதும் இருக்கும்... ஓய்வெடுக்கும் போதும் இருக்கும்.

அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, ஓய்வில் இருக்கும்போது அதிகமாகவும், அசைவுகளின் போது குறைவாகவும் இருப்பதாக வித்தியாசமான அறிகுறியைக் காட்டும். இவற்றை வைத்துதான் வலியின் தன்மையைப் பிரிப்போம்.

முதுகுவலி
அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி

அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலி, அழற்சியால் ஏற்பட்டது போல தெரிகிறது. இதற்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும்.

முதுகுத்தண்டை சுற்றியுள்ள தசைகள் இறுகியிருக்கின்றனவா, அழற்சியால் ஏற்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் (Spondylitis) பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அந்த டெஸ்ட்டுகளை பார்த்துவிட்டு, அழற்சி தான் காரணம் என உறுதியானால், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இல்லாத பட்சத்தில், இதை எளிதாக குணப்படுத்தி விடலாம், கவலை வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: பல காலமாகச் செய்கிற, தெரிந்த வேலையில் திடீர் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏன்?

Doctor Vikatan:தெரிந்த பணிகளைச்செய்வதில் சில நேரங்களில் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம். இயல்பானதுதானா, எப்படித் தவிர்ப்பது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மனநல மரு... மேலும் பார்க்க

Doctor Vikatan: ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

Doctor Vikatan: என்உறவினருக்கு சர்க்கரைநோய் இருக்கிறது. அவருக்கு உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. ரெட் ஒயின் குடித்தால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என அவருக்கு யாரோ அற... மேலும் பார்க்க

சிறுநீர்ப்பாதைத் தொற்று வராமல் தடுக்குமா டாய்லெட் சீட் சானிட்டைசர்?

பொதுக்கழிவறைகள் என்றாலே அதில் கிருமிகள் அதிகமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தினால், சிறுநீர்ப்பாதைத் தொற்று கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்பதுதான் நம் எல்லோருடைய எண்ணமும். அது உண்மையும்கூட. அதே நேரம், இப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?

Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போதுஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவது ஏன்? பொதுவாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் என எல்லா பாதிப்புகளும் வரும் என்று சொல்வார்கள்... மேலும் பார்க்க

அலுமினிய பாத்திரங்களில் சமைப்பதில் என்னதான் பிரச்னை? நிபுணர் விளக்கம்!

அலுமினிய பாத்திரங்கள் இல்லாத இந்திய சமையலறையே இல்லை என்று கூறக்கூடிய அளவிற்கு அலுமினிய குக்கர்களும், வாணலிகளும் நமது அன்றாட வாழ்வில் பங்களித்து வருகின்றன. குறைவான எடை, மலிவான விலை என அலுமினியப் பொருட்... மேலும் பார்க்க

Apollo: பரம்பரை புற்றுநோய்; விழிப்புணர்வு கொடுக்கும் முயற்சியில் அப்போலோ கேன்சர் சென்டர்

புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முதன்மை வலையமைப்பாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC), பரம்பரை புற்றுநோய் விழிப்புணர்வு வார அனுசரிப்பின்போது, மரபணுக்கள் காரணமாக ஏற்படும் பரம்பரை புற்றுநோய்... மேலும் பார்க்க