செய்திகள் :

Doctor Vikatan: இந்தியனா, வெஸ்டர்னா... எந்த toilet யாருக்கு ஏற்றது, ஏன்?

post image

Doctor Vikatan: இந்தியன் டாய்லெட் உபயோகம்தான் சிறந்தது என்று சிலரும், வெஸ்டர்ன் டாய்லெட்தான் சிறந்தது என வேறு சிலரும் காலங்காலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பெரும்பாலான வீடுகளில் இந்தியன் டாய்லெட்டை வெஸ்டர்னாக மாற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். உண்மையில், இந்த இரண்டில் எது சிறந்தது... யார், எதை உபயோகிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

தினமும் காலையில் எழுந்ததும் முழுமையாக மலம் கழித்துவிட்டாலே, ஒருவித நிம்மதியான உணர்வு ஏற்படும் பலருக்கும். மலம் கழிப்பதற்காகவே, டீ குடிப்பதாகவும் புகை பிடிப்பதாகவும் சொல்கிற பலரைப் பார்க்கலாம். சிரமமின்றி மலம் கழிக்க வெஸ்டர்ன் டாய்லெட்டை விடவும் இந்தியன் டாய்லெட்டே சிறந்தது.  

இந்தியன் டாய்லெட் உபயோகிக்கும்போது குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் மலம் கழிக்க வேண்டும். இது பல வகைகளில் சாதகமானதும்கூட. நம் உடலில் மலம் சேரும் மலக்குடலை, ஆசன சுருக்குத் தசை என்கிற மூடிதான் இறுக்கமாகப்  பிடித்துக்கொண்டிருக்கும். ஆசன சுருக்குத் தசை என்கிற சுருக்குப்பையைத் திறப்பதற்கு மெல்லிய தசைகள் இருக்கும். அந்தத் தசைகள் எளிதாகவும் முழுமையாகவும் வேலை செய்ய, ஸ்குவாட்டிங் பொசிஷன் எனப்படும் குத்தவைத்து உட்காரும் முறையே மிகச் சிறந்தது.   நாம் அந்த பொசிஷனில் உட்காரும்போது முழுமையாகத் திறக்கவும், மடிந்த நிலையிலுள்ள மலக்குடல் திறக்கவும் செய்கிறது. 

எந்த பொசிஷன் சரியானது?

ஹெர்னியா எனப்படும் குடல் இறக்க பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் குத்தவைத்து உட்காரும் பொசிஷன் உதவுகிறது. ரொம்பவும் முக்காமல் எளிதாக மலம் கழிக்கவும் இந்த பொசிஷன் வசதியாக இருக்கும். குழந்தைகளை சிறு வயதிலிருந்தே இப்படி குத்தவைத்து உட்காரப் பழக்கும்போது, அவர்கள் வளர்ந்ததும்  உடலின் பேலன்ஸுக்கும் உதவியாக இருக்கும். கால்களுக்கான தசைகளும் இந்த பொசிஷனால் வலுப் பெறும்.

இத்தனை நன்மைகள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, மூட்டுத் தேய்மானம் வரும்போது, வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். உடல் இயக்கத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலோ, மூட்டுத் தொந்தரவு இருந்தாலோ, கீழே உட்கார்ந்து எழுந்திருப்பதில் பிரச்னை இருந்தாலோ, நரம்பியல் பிரச்னை இருந்தாலோ, வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிப்பதுதான் சரியானது.  

இந்தியன் டாய்லெட் உபயோகிப்பதன் நல்ல தன்மைகளையும் வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிப்பதன் சௌகர்யத்தையும் சேர்த்து அனுபவகிக்கும்வகையில், இப்போது ஃபுட் ஸ்டூல்கள் கிடைக்கின்றன. இதை வெஸ்டர்ன் டாய்லெட்டில் வைத்துப் பயன்படுத்தினால், மலக்குடலுக்குத் தேவையான வசதியான பொசிஷனை தக்கவைக்க முடியும். ஹெர்னியா பாதிப்பையும் தவிர்க்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

TN Assembly: `அண்ணா பல்கலை. மாணவி வழக்கு' - கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வரின் ஆவேச உரை!

2025-ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி 3-வது நாளாக நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலை... மேலும் பார்க்க

Canada: ``டிரம்பின் அச்சுறுத்தலுக்கு கனடா பின்வாங்காது'' - ஜஸ்டின் ட்ருடோ சொல்ல காரணம் என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதைத் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: உப்பும் சர்க்கரையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் சரியானதா?

Doctor Vikatan:சர்க்கரையையும் உப்பையும் அறவே தவிர்த்த உணவுகள் ஆரோக்கியமானவையா? இவை இரண்டும் உடலுக்குத் தேவையில்லையா? சர்க்கரையோ, உப்போ இல்லாத உணவுகளை உண்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?பதில் சொல்கி... மேலும் பார்க்க

Canada: ``கனடாவின் அடுத்தப் பிரதமர்?" - ரேஸில் முன்னணியில் இருக்கும் அனிதா ஆனந்த! - யார் இவர்?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, 2025 தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாகவும், ஆளும் லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அடுத்தப்... மேலும் பார்க்க

Mushroom: காளான்களை ஏன் அடிக்கடி சாப்பிடணும்..? காரணம் சொல்லும் நிபுணர்கள்!

சைவ உணவு பிரியரோ அல்லது அசைவ உணவு பிரியரோ இரண்டு வகையினருமே விரும்பி உண்ணும் ஓர் உணவாக இருக்கிறது காளான்(Mushroom). பெரியவர்கள் சிறியவர்கள்வரை விரும்பி உண்ணும் காளானில் ருசியுடன் சேர்ந்து உடலுக்குத் த... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார் அந்த விவசாயி?

``என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்..." இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது.'விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் ... மேலும் பார்க்க