செய்திகள் :

Doctor Vikatan: இளநரைக்கு ஹென்னா உபயோகித்தால், சருமத்தில் கருமை உண்டாகுமா?

post image

Doctor Vikatan: என் வயது 38. எனக்கு 20 ப்ளஸ் வயதிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்துவிட்டது. அதனால் அப்போதிலிருந்து தலைக்கு ஹென்னாதான் உபயோகிக்கிறேன். கடந்த சில வருடங்களாக என் தோழி சொன்னதன் பேரில், முதல் நாள் ஹென்னாவும், அடுத்த நாள் அவுரி இலை பொடியும் உபயோகிக்கிறேன்.  கடந்த ஒரு வருடமாக என் சருமத்தில் கருமை படர ஆரம்பித்திருக்கிறது. கெமிக்கல் டை உபயோகித்தால் சருமம் கறுப்பாகும் என்று கேள்விப்பட்டதால் ஹென்னா உபயோகிக்கிறேன். அதுவும் சருமத்தைக் கறுப்பாக மாற்றுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தரா

I வசுந்தரா

கெமிக்கல் கலந்த ஹேர் டை ஆபத்தானது என்ற எண்ணத்திலும், ஹென்னா இயற்கையானது என்பதால் அது பாதுகாப்பானது என்ற எண்ணத்திலும் பலரும் அதை உபயோகிக்கிறார்கள். ஹென்னாவுடன் சேர்த்து அவுரியையும் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பொருள்கள் எல்லாம் பாதுகாப்பானவை, பக்க விளைவுகள் அற்றவை என அர்த்தமில்லை.

அவுரி என்பது சிறந்த மூலிகைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அது கருநீல  நிறத்தைக் கொடுக்கக்கூடியது. ஹென்னா எனப்படும் மருதாணியை கூந்தலில் தடவும்போது, அது முடிக்கு ஆரஞ்சு நிறத்தைக் கொடுக்கிறது. அதற்கு மேல் அவுரியைப் பூசும்போது, அதன் கருநீல நிறம் சேர்ந்து கூந்தலுக்கு கருமை நிறம் கிடைக்கிறது. அவுரி இயற்கையான மூலிகைதானே என்ற எண்ணத்தில் இப்போது பலரும் இப்படித்தான் ஹென்னா- அவுரி காம்பினேஷனை உபயோகிக்கிறார்கள். ஆனால், அவுரியின் அடர் நிறமானது சிலருக்கு சருமத்தில் இறங்கவும் வாய்ப்பு உண்டு. இப்படி தலை வழியே சருமத்தில் இறங்கும் நிறமானது, சருமத்தைக் கறுப்பாக்கிவிடுகிறது.  அது சரியாக பல நாள்கள் ஆகின்றன.

அவுரி

எனவே, அவுரியை தவிர்ப்பது அல்லது குறைவான அளவு உபயோகிப்பதுதான் சரியாக இருக்கும்.  ஏற்கெனவே அவுரி உபயோகித்ததால் ஏற்பட்ட சரும கருமையைப் போக்க பால் தடவி வரலாம். மசாஜ் கிரீம் உபயோகித்து மசாஜ் செய்து வரலாம். முல்தானி மிட்டியுடன் சிறிது பன்னீரும், கிளிசரினும் கலந்து கருமை படர்ந்த இடத்தில் பேக் போல போடலாம்.  இதையெல்லாம் வாரத்தில் இருமுறை செய்தால் போதும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது அவசியம். எஸ்.பி.எஃப் 30 முதல் 50 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகித்து வந்தால், அவுரியினால் ஏற்பட்ட கருமை மெள்ள மெள்ள மறையும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

WAQF Bill: ``இஸ்லாமியர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம்..'' - ஆர்பாட்டம் அறிவித்த திருமாவளவன்!

நாடாளுமன்றத்தில் நிறைவேறப்பட்டுள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடுமுழுவதும் குரல்கள் எழுந்துள்ளன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "சட்டத்தின் பெயரால் இஸ்ல... மேலும் பார்க்க

``பிரபல யூடியூபருக்கு இந்த நிலைமைனா, சட்ட ஒழுங்கு மிக கேவலமாக..'' - திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் பட்டப் பகலில் அத்தும... மேலும் பார்க்க

WAQF Bill: ``இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்'' - தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோ... மேலும் பார்க்க

WAQF Bill: ``நம்பிக்கை உடைந்துவிட்டது'' - நிதிஷ் கட்சியில் இருந்து விலகிய 2 மூத்த நிர்வாகிகள்!

வக்ஃப் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்ததனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இரண்டு மூத்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் செயல்படும் ஐக்கி... மேலும் பார்க்க

US Tax Hike: நடுக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தை; `இப்படித்தான் நடக்கும்' - ட்ரம்ப் சொன்ன பதில்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரி விதிப்புகள் வால் ஸ்ட்ரீட்டை உலுக்கியுள்ளது. கோவிட் தொற்று பரவலுக்கு பிறகு உலக நிதி சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய அதிர்ச்சியாகக் கருதுகின்றனர். இந்த வரிவி... மேலும் பார்க்க